அம்மா மக்கள் முன்னேற்ற கழக நகர் செயலாளரை SDPI கட்சி நிர்வாகிகள் சந்தித்து இரங்கல் தெரிவித்தனர்

கீழக்கரை நகரில் வாழும் அனைத்து சமுதாய சகோதரர்களும், சமய வேறுபாடுகளை களைந்து, ஒற்றுமையோடு அண்ணன் தம்பிகளாக சகோதர பாசத்தோடு வாழ்ந்து வருகின்றனர். ஒருவருக்கொருவர் தங்களுக்குள் சுக துக்கங்களில் நட்பு பாராட்டி நல்ல நண்பர்களாக அகம் மகிழ்கின்றனர்.

இதனை பறை சாற்றும் விதமாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக நகர் செயலாளர் சுரேஷின் தந்தையார் இறப்பையொட்டி, பிரிவு துயரத்தில் வாடும் அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லும் விதமாக இரங்கல் தெரிவிக்க கீழக்கரை SDPI கட்சியின் நகர் நிர்வாகிகள் நகர் தலைவர். கீழை அஸ்ரப், நகர் துணை தலைவர். சட்டப் போராளி நூருல் ஜமான்,  நகர் செயலாளர். காதர், கிழக்கு கிளை பொருளாளர். முர்ஸலின் ஆகியோர் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நகர் செயலாளர் சுரேஷை சந்தித்து ஆறுதல் கூறினர் .