இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் “கீழை அமைதி மற்றும் வழிகாட்டி மையம்” ஆரம்பம்..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கீழக்கரை தஃவா குழு சார்பாக “கீழை அமைதி மற்றும் வழிகாட்டி மையம்” இன்று (25-03-2018) AK Complex, இரண்டாவது மாடியில் தொடங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிறப்புரையை அஷ்ஷெய்க் அப்துல் மஜீத் மஹ்ளரி மற்றும் அஷ்ஷெய்க் அப்துர்ரஹ்மான் சதகி ஆகியோர் “கீழையில் மார்க்க கல்வியின் நிலை” மற்றும் “கீழை மக்களே அல்லாஹ்வின் பக்கம் அழைப்போம் வாருங்கள்” என்ற தலைப்பில் வழங்கினார்.

அமீரகத்தில் இருந்து தாவா குழுவின் தலைவர் முஹம்மது அஸாருதீன் மற்றும் செயலாளர் சட்டப் போராளி அஹமது அப்துல் காதர் ஆகியோர் வீடியோ காணொளி காட்சிகள் மூலமாக உரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் தாவா குழு அமைப்பின் அலுவலக மாதிரி புகைப்படம்  வெளியிடப்பட்டது இந்நிகழ்வில் ஆர்வமுள்ள ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக இந்நிகழ்ச்சியின் அறிமுக தொகுப்புரையை சட்டப் போராளிகள் முஹம்மது அஸாருதீன் மற்றும் ஹமீது பர்ஹான் சிறப்பாக பேசினர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.