கீழை மாநகருக்கு வருகை தந்த வரலாற்று ஆய்வாளர் ‘ராஜா முஹம்மது’ – வரவேற்ற ‘பாதன் ஹெரிடேஜ் லீக்’ அறக்கட்டளை

தொன்மை வரலாறுகளை தன்னகத்தே கொண்ட பழம்பெரும் கீழக்கரை நகருக்கு சென்னை மீயூசியத்தின் முன்னாள் துணை தலைவர் தொல்லியல் ஆய்வாளர் ராஜா முஹம்மது நேற்று முன் தினம் வருகை தந்தார். அவரை கீழக்கரை வரலாற்று ஆராய்ச்சியாளர். சட்டப் போராளி. அபு சாலிஹ் வரவேற்று கீழை மாநகரின் பல்வேறு சரித்திர பின்னணியுள்ள பகுதிகளுக்கு அழைத்து சென்றார்.

கீழக்கரை பகுதியில் எண்ணற்ற பழங்காலத்து கல்வெட்டுகளும், ஓலை சுவடிகளும், நினைவு தூண்களும், சிற்பங்களும் காணப்படுகிறது. இவற்றையெல்லாம் முறையாக தொகுத்து, பாதன் ஹெரிடேஜ் லீக் எனும் அறக்கட்டளை அமைப்பின் மூலம் ஆவணப்படுத்தி கீழை மாநகரின் வரலாறுகளை எதிர்கால இத்தலைமுறையினருக்கு உண்மை மாறாமல் கொண்டு சேர்க்கும் பணியினை விரைவில் துவங்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.