பெரியப்பட்டினம் அணி மாநில கடற்கரை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது…

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், இராமநாதபுரம் மாவட்டம் அரியமான் கடற்கரையில் நடந்த மாவட்ட பீச் கால்பந்து போட்டியில் பெரியப்பட்டினம் கால்பந்து அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து மாநில போட்டிக்கு தகுதி பெற்றது.

நேற்று (25.03.2018) கன்னியாக்குமரி மாவட்டம் பெரியகாடு கடற்கரையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் கன்னியாக்குமரி விளையாட்டு ஆணையம் இணைந்து மாநில அளவிலான பீச் வாலிபால், பீச் கபடி, பீச் கால்பந்து போட்டிகள் நடத்தின.

இப்போட்டியில் கன்னியாக்குமரி, தூத்துக்குடி, கடலூர், நாகை, தஞ்சை, சென்னை ஆகிய ஏழு கலலோர மாவட்ட அணிகள் கலந்து கொண்டன. மாநில போட்டிக்கு தகுதி பெற்ற அணிகளுக்கிடையே நாக் அவுட் முறையில் போட்டிகள் நடந்தன.

இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற இராமநாதபுரம் மாவட்டம் பெரியப்பட்டினம் கால்பந்து கழக அணி தஞ்சை மாவட்ட அணியை 6:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..