தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் 27 வது பட்டமளிப்பு விழா – முழுமையான புகைப்பட தொகுப்பு ..

தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் 27 வது பட்டமளிப்பு விழா மற்றும் 7 வது முபல்லிகா சனது விழா இன்று காலை 11.00 மணியளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இறைவணக்கத்துடன் தொடங்கிய இவ்விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.சுமையா வரவேற்புரை வழங்கினார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் எஸ்.சுப்பையா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியதோடு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

இப்பட்டமளிப்பு விழாவில் இளங்கலை மாணவிகள் 510 பேரும், முதுகலை மாணவிகள் 67 பேரும், இளநிலை ஆய்வாளர் 2 பேரும் மொத்தம் 579 மாணவிகள் பட்டங்களைப் பெற்றனர்.

இப்பட்டமளிப்பு விழாவின் முன்னதாக நடந்த 7 வது முபல்லிகா சனது விழாவில் மௌலானா மௌலவி டி.நூர் முகம்மது பாகவி, மேற்பார்வையாளர், தமிழ்நாடு அன்வோ நிஸ்வான்ஸ், முகம்மது ரஃபி பொது செயலாளர், அல்ஹரமான் சாரிடபுள் டிரஸ்ட்,சென்னை மற்றும் எம்.ஏ.எஸ்.முத்து ஹதிஜா ஆலிமா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியதோடு மாணவிகளுக்கு சனது பட்டங்களை வழங்கினார்.

சனது பட்டமளிப்பு விழாவில் 201 மாணவிகள் பட்டங்களைப் பெற்றனர். இப்பட்டமளிப்பு விழாவில் அல்ஹாஜ் ஏ.கே ஹாலித் புஹாரி, கல்லூரி செயலாளர் அவர்களும், குர்ரத் ஜெமிலா புரவலர், சீதக்காதி அறக்கட்டளை சென்னை மற்றும் செயலாளர், முஸ்லீம் பெண்கள் அமைப்பு, இராமநாதபுரம் அவர்கள் மற்றும் ஜீனத் அய்யூப் சீதக்காதி அறக்கட்டளை உறுப்பினர், தேர்வாணையர், முதன்மையர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டார்கள்.

இறுதியாக நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை சேக் தாவூத்கான் சீதக்காதி அறக்கட்டளை துணைப்பொது மேலாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோரும் செய்திருந்தனர்.

புகைப்படத் தொகுப்பு

புனித ரமலான் வாழ்த்துக்கள்..