இராமநாதபுரம் முஹமது சதக் தஸ்தகீர் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.

இராமநாதபுரம் மாவட்டம் முஹமது தஸ்தகீர் கல்வியியல் கல்லூரி சார்பில் நடத்தும் New Horizons in Teacher EducatioN என்ற தலைப்பில் 24 -3 – 18 அன்று தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் முஹமது சதக் கல்லூரி அறக்கட்டளை தலைவர் யூசுப் முன்னிலை வகித்தார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக கல்வியியல் கல்லூரியின் முதல்வர் பாலு தலைமை வகித்தார். கேரள மத்திய பல்கலைகழகத்தின் உதவி பேராசிரியர் தியாகு சிறப்புறை யாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் சோமசுந்தரம் வரவேற்றார். சைடெக் முதல்வர் முனைவர் ரியாஸ் மற்றும் முகமது சதக் கபீர் சி பி எஸ் இ முதல்வர் பெரோஸ் வாழ்த்துறை வழங்கினார்.

இதில் தமிழ்நாடு மற்றும் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பாட வல்லுனர்கள் கல்வியாளர்கள் , முதல்வர்கள் பேராசிரியர்கள் ஆய்வாளர்கள் மற்றும் ஆசிரிய மாணவர்கள் என 180 பேர் கலந்து கொண்டனர். இதில் அழகப்பா பல்கலைக்கழக கல்வியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் பாலு மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..

1 Comment

Comments are closed.