கீழக்கரை மின்சாரவாரியத்திற்கு திமுக சார்பாக கோரிக்கை மனு…

கீழக்கரையில் பல இடங்களில் Transformer முதல் மின் கம்பம் வரை மிகவும் சிதிலம் அடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. அதிலும் முக்கியமாக சொக்கநாதர் கோவில் அருகே உள்ள டிரான்ஸ்பார்மர், 500 ப்ளாட் பகுதி, அல் அக்‌ஷா நகர், புது கிழக்கு தெரு, 14 & 15 வார்டு பகுதிகளில் மாற்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அதே போல் வருகின்ற கோடை காலத்தை கருத்தில் கொண்டு பராமரிப்பு பணிகளையும் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் மேற்கொள்ளுமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இக்கோரிக்கையை கீழக்கரை உதவி மின்பொறியாளர் பால்ராஜ் பார்வைக்கு திமுக நகர செயலாளர் பசீர் அகமது தலைமயில் கொடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஜமால் பாருக், நகர் துணை செயலாளர். S.K.V முகம்மது சுஐபு, செயற்குழு உறுப்பினர். மக்கள் டீம் காதர், நகர் வர்த்தக அணி மர்ஹபா சித்திக், நகர் விவசாய அணி ஆகியோர் உடனிருந்தனர்.

சத்திய பாதை மாத இதழ் ..

சத்திய பாதை மாத இதழ் ..

சத்தியம் வந்தது… அசத்தியம் அழிந்தது..