தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் 30 வது விளையாட்டு விழா..

கீழக்கரை தாசிம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் இன்று 21.3.2018 மாலை 4 மணியளவில் கல்லூரி மைதானத்தில் 30வது விளையாட்டு விழா நடைபெற்றது. இறை வணக்கத்துடன் தொடங்கிய இவ்விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் எஸ். சுமையா வரவேற்புரையாற்றினார்.

பின்னர் ஶ்ரீ  தாரணி முருகேசன், நிர்வாக அறங்காவலர்,DARE அறக்கட்டளை, இராமநாதபுரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார். திருமதி குர்ரத் ஜெமிலா, புரவலர் சீதக்காதி அறக்கட்டளை, சென்னை மற்றும் செயலாளர் முஸ்லிம் பெண்கள் அமைப்பு, இராமநாதபுரம் சிறப்பு விருந்தினரைக் கௌரவித்ததோடு ஒலிம்பிக் கொடியினை ஏற்றி வைத்தார். திருமதி எஸ். சாஹிரா பானு, முதல்வர், பேர்ல் மெட்ரிக்குலேசன் பள்ளி கீழக்கரை கல்லூரிக் கொடியினை ஏற்றி வைத்தார்.

இதனை தொடர்ந்து மாணவர்களின் அணிவகுப்பு மற்றும் யோகா, பலவிதமான விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விளையாட்டு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விளையாடடு விழாவிற்கான ஆண்டறிக்கையை முனைவர் ஏ. ஜாஸ்மின், துறைத்தலைவர், வணிக மேலாண்மையியல் துறை வாசித்தார்.

இவ்விழாவில் முன்னாள் நகர்மன்றத் தலைவர் தஇராவியத்துல் கதரியா, கல்லூரி துணை முதல்வர்கள், கலை மற்றும் அறிவியல்புல முதன்மையர்கள், தேர்வாணையர், பலதுறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர். இறுதியாக நவ்ரின் பானு மூன்றாமாண்டு தகவல் தொழில் நுட்பவியல் மாணவி நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவுற்றது. ஓவர்ஆல் விருதினை மரியம் அணியினரும், தனிநபர் விருதினை பவித்ரலெட்சுமி இரண்டாமாண்டு வணிகவியல் துறை மாணவியும் பெற்றனர்.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை சீதக்காதி அறகக்ட்டளை துணைப்பொதுமேலாளர் சேக்தாவூத்கான் மற்றும் உடற்கல்வி பேராசிரியை கலா ஆகியோர் செய்திருந்தனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..