இராமநாதபுரத்தில் ரத யாத்திரையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்..

நேற்று செங்கோட்டை பகுதியில் மின்னல் வேகத்தில் வந்து மறைந்த ரத யாத்திரை இன்று இராமநாதபுரம் வந்தடைந்து பொதுக்கூட்டம் நடந்துவதாக திட்டமிட்டிருந்தார்கள். இதை எதிர்த்து இன்று மதக்கலவரத்தை தூண்டும் போக்கை கண்டித்து CPI தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள், CPI, CPM, தமிழ் புலிகள், SDPI, பாப்புலர் பிரண்ட், இந்திய முஸ்லீம் லீக் ஆகிய தோழமை கட்சிகள் கலந்துக்கொண்டன. இந்த ஆர்ப்பாட்டம் வெற்றி என கூறும் வகையில் ரத யாத்திரை ஊருக்குள் வராமல், பொதுக்கூட்டமும் நடத்தாமல் புறவழி சாலை வழியாக இராமநாதபுரத்தை ரத யாத்திரை கடந்து சென்றது.

அதே போல் இன்று திமுக கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் சீமானின் நாம் தமிழர் கட்சியும் இராமநாதபுரத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். போராட்டத்தில் மாவட்ட செயலாளர் பத்மநாபன், தொகுதி செயலாளர் ராஜீ, கீழக்கரையிலிருந்து நகர் செயலாளர் பிரபாகரன், இணை செயலாளர் ஹபில் ரஹ்மான், இளைஞர் பாசரை செயலாளர் வாசிம், புரோஸ்கான், தவ்பிக், தமிம், ராசித், சிபான், இக்ரம்தீன் ஆகியோர் பங்கேற்றனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..