வாகன விபத்து ..பல பேர் படுகாயம் ..

இன்று (19-03-2018) கீழக்கரையில் இருந்து ஏர்வாடி செல்லும் வழியில் முள்ளுவாடி அருகில் மினிலாரி அதிவேகமாக வந்ததில் கட்டுபாட்டை இலந்து நிலைதடுமாறி விபத்து ஏற்பட்டது.

அந்த வேனில் பயணம் செய்த அனைவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு கீழக்கரை மற்றும் இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பயணம் செய்தவர்கள் திருமண விசயமாக சென்று விட்டு திரும்பி வரும் வழியில் விபத்து ஏற்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

இச்சம்பவம் சம்பந்தமாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகிறார்கள்.