Home செய்திகள்மாநில செய்திகள் மீண்டும் ஒரு ரதயாத்திரை.. மீண்டும் ஒரு மதக்கலவரத்திற்கு வித்திடுமோ??..

மீண்டும் ஒரு ரதயாத்திரை.. மீண்டும் ஒரு மதக்கலவரத்திற்கு வித்திடுமோ??..

by Mohamed

1990ம் ஆண்டுகளில் ரதயாத்திரையால் படிந்த கரைகள் இன்னும் நீங்காத கரைகளாக உள்ள நிலையில், மீண்டும் மத வாத பிரிவினர்களால் தொடங்கப்பட்டுள்ள ரத யாத்திரை, ஒற்றுமையாக மத நல்லிணக்கத்தோடு  இருக்கும் பல தரப்பட்ட சமுதாய மக்கள் மத்தியில் பெரும் பீதியை கிளப்பியுள்ளது.

இந்தியா முழுவதும் ராமராஜ்ஜிய ரத யாத்திரையை   விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி அன்று அயோத்தியிலிருந்து தொடங்கி வைத்தது. மார்ச் 25 வரையான  ராமராஜ்ஜிய ரதயாத்திரை 41 நாட்களுக்கு ஆறு மாநிலங்களை கடந்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த யாத்திரை தமிழகத்தின் எல்லைப்பகுதியான நெல்லை மாவட்டத்தின் செங்கோட்டையை எதிர் வரும் 20 ஆம் தேதி அன்று வந்தடைய உள்ளது. கடந்த காலங்களில் இது போன்ற ரத யாத்திரைகளை பாஜக வின் மூத்த உறுப்பினர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஸி ஆகியோர் தலைமையில் நடத்தப்பட்ட பொழுது பல ஊர்களில் கலவரங்கள் ஏற்பட்டு பலர் உயிரிழந்ததை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. அக்கரை இன்று வரை அழியா கரையாகவே உள்ளது. அந்த கலவரங்களை தொடர்ந்து 1992ல் பாபர் மசூதி இடிப்பட்டது என்பதும் கரைபடிந்த வரலாறாகும். மீண்டும் இது போன்ற ரத யாத்திரையால் அமைதி பூங்காவான தமிழகம் கலவர பூமியாகி விடக்கூடாது.

ஆகையால் தமிழகத்தின் உள்ளே வருவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று பல் வேறு சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் தங்கள் எதிர்ப்புகளை வலுவாக தெரிவித்து வருகிறது. இந்த ரத யாத்திரை தமிழகத்தில் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று SDPI கட்சி திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இது குறித்து SDPI கட்சியின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி கூறுகையில்: தமிழகத்தில் ரத யாத்திரை நுழைந்தால் அண்ணன் தம்பிகளாக வாழ்ந்து வரும் தமிழ் மக்களிடையே அமைதியை சீர் குலைந்து விடும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் பல் வேறு இயக்கங்களின் தலைவர்களை கொண்ட காவி பயங்கரவாத எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பாக யாத்திரைக்கு தடை விதிக்கக்கோரி காவல்துறை தலைமை இயக்குநரிடம் வலியுறுத்தப்பட்டது.

அதையும் மீறி அனுமதி வழங்கினால் தமிழக எல்லைப்பகுதியான செங்கோட்டை வழியாக யாத்திரை நுழையும் போது அதை தடுத்து நிறுத்தவது என்று காவி பயங்கரவாத எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!