விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செயற்குழு கூட்டம்..

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் கீழக்கரை நகர் செயற்குழுக் கூட்டம் 18.3. 2018 அன்று காலை 10 மணிக்கு உசைனியா திருமண மகாலில் நடைபெற்றது. இக்கூட்டத்தின்கு நகர் செயலாளர் சு.கமீது யூசுப் தலைமை தாங்கினார், நகர் பொருளாளர் கோவிந்தராஜ், நகர் துணைச் செயலாளர்கள் பா.முத்துக்குமார், சகுபர் சாதிக், ஐ. கருங்கதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறுத்தை பாஷா அவர்கள் வரவேற்றுப் பேசினார். இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை நகர் அமைப்பாளர் நெய்னா முகம்மது, இசுலாமிய சனநாயகப் பேரவை நகர் அமைப்பாளர் ஹிதாயத்துல்லா ஆகியோர் கலந்துக்கொண்டார்கள்.

சிறப்பு அழைப்பாளர்களாக இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிச் செயலாளர் த.அற்புதக்குமார், முற்போக்கு மாணவர் கழகம் மாவட்ட அமைப்பாளர் ஜெ.ராஜேஸ் குமார், கல்வி பொருளாதார விழிப்புணர்வு இயக்கத்தின் மாவட்ட துணை அமைப்பாளர் தெ.பஞ்சநாதன், மாவட்ட செய்தித் தொடர்பாளர் சத்தியராஜ் வளவன் ஆகியோர் கலந்துக்கொண்டு கருத்துரை வழங்கினார்கள்.

இச்செயற்குழுக் கூட்டத்தில் கீழக்கரை நகர் அனைத்து வார்டுச் செயலாளர்கள், அனைத்து முகாம் செயலாளர்கள் கலந்துக் கொண்டனர். நிறைவாக  ஹசன்  நன்றியுரையாற்றினார்.

இச்செயற்குழுக் கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் இயற்றப்பட்டன.

1. வரும் உள்ளாட்சி மன்றத் தேர்தலில் கீழக்கரை நகரத்தில் மொத்தம் உள்ள 21 வார்டுகளில் பட்டியல் இனத்தவர்களுக்கான அரசியல் அமைப்புச் சட்டப்படியான 18% மான 4 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

2. நகரில் பொதுமக்களை, மாணவர்களை, சிறுக்குழந்தைகளை கடிக்கத்துரத்தும் வெறிநாய்களை பிடித்து அப்புறப்படுத்தல் வேண்டும். ஏற்கனவே வெறிநாய் கடித்து சிறுவன் ஒருவன் இறந்துள்ளான். வெறிநாய்களை பிடிக்கவில்லை என்றால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பொதுமக்களை ஒருங்கினைத்து முற்றுகைப் போராட்டம் நடைபெறும்.

3. தமிழ்நாட்டிலேயே போக்குவரத்து காவல் நிலையம் இல்லாத ஒரே நகராட்சி கீழக்கரை தான். நகரின் போக்குவரத்து நெறிசலை, பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், மருத்துவமணைக்குச் செல்லும் நோயாளிகள், வேலைக்குச் செல்லும் பொதுமக்களின் துயரங்களை மனதில் கொண்டு போக்குவரத்து காவல் நிலையம் அமைக்க வேண்டும்.

4. தமிழ்நாட்டில் அரசு மேல்நிலைப் பள்ளியே இல்லாத ஒரே நகராட்சி கீழக்கரை நகராட்சி தான். ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கீழக்கரையில் அரசு மேல்நிலைப் பள்ளி ஏற்படுத்த வேண்டும்.

5. கீழக்கரை பள்ளிகளில் மாணவர்களுக்கான சீறுடைகளை மதுரை, இராமநாதபுரம் ஆகிய நகரங்களில் மொத்தம்மாக தைக்கக் கொடுக்கின்றது பள்ளி நிர்வாகம். அதனால் கீழக்கரையில் உள்ள தையல் தொழிலாளர்கள் வருமானம் இல்லாமல் துயரப்படுகிறார்கள். அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சீறுடைகள் தைப்பதற்கு உள்ளூரில் உள்ள தையல் தொழிலாளர்களுக்கே வழங்கவேண்டும்மாய் பள்ளி நிர்வாகங்களை இச்செயற்குழு கேட்டுக் கொள்கின்றது.

6. கீழக்கரையில் உள்ள சாலை, குடிநீர், தெருவிளக்கு ஆகியவற்றை சரிசெய்வதுடன் , சாலைகளில் தேவையான இடங்களில் வேகத்தடை ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றோம்.

7. கீழக்கரையில் லட்சக்கனக்கில் பணம் செலவு செய்து வாங்கப்பட்ட நம்ம டாய்லட் பயன்பாடற்று வீனாக கிடக்கின்றது. இதை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர நகராட்சி நிர்வாகத்தை இச்செயற்குழு கேட்டுக் கொள்கின்றது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..