Home செய்திகள் மாற்றுத் திறனாளிகள் நல பள்ளியில் மலர்ந்த மனித நேயம் – நெகிழ வைத்த கீழக்கரை கல்லூரி மாணவிகள்

மாற்றுத் திறனாளிகள் நல பள்ளியில் மலர்ந்த மனித நேயம் – நெகிழ வைத்த கீழக்கரை கல்லூரி மாணவிகள்

by keelai

பாடித் திரிந்த பறவைகளாக கல்லூரியில் கல்வி பயிலும் மாணவ,மாணவிகள் தங்கள் இறுதி ஆண்டியில் ஏதாவது ஒரு மறக்க முடியாத நிகழ்ச்சி நடத்தி சந்தோஷமாக பிரிவார்கள். இந்த அடிப்படையில் கீழக்கரை தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் B.A ENGLISH ‘B’ பிரிவில் படிக்கும் மாணவிகள் தங்கள் பிரிவு உபச்சார நிகழ்வினை இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா ஓரிக்கோட்டையில் இருக்கும் மாற்றுத் திறனாளிகள் விடுதியான கருணை இல்லத்தில் தங்கி இருக்கும் மாணவ, மாணவிகளுக்கு தன் குடும்பத்தார்களுடன் நேரில் சென்று இரண்டு நாள் உணவு வழங்கி அனைவரையும் நெகிழ வைத்துள்ளனர்.

இந்த மனித நேயமிக்க இந்த நிகழ்வினை கீழக்கரை மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தின் செயலாளர் முகைதீன் இபுறாகீம் ஏற்பாடு செய்திருந்தார். இந்த கருணை இல்லத்தில் எழுபதுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் மாணவிகளை உணவு, உடை, உறைவிடம் கொடுத்து பாதுகாத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படும் சில மாற்றுத்திரனாளிகள் இல்லம் பெயரளவில் சுயநலத்துக்காக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த இல்லம் அரசு அங்கீகாரத்தோடு நடை பெறுகின்றது. இப்படிப்பட்ட சந்திப்புகள் மூலம் நமக்கு மனநிறைவு ஏற்படுவதோடு இந்த குழந்தைகளுக்கும் மனநிறைவு ஏற்படும்.இது போன்ற பள்ளிகளுக்கு தயாள குணம் படைத்த செல்வந்தர்கள் நேரில் சென்று உதவ முன் வர வேண்டும்.

இந்த மனித நேய பணியில் ஈடுபட்ட காசீம் பீவி கல்லூரி மாணவிகளையும், ஆசிரிய பெருந்தகைகளையும், மக்கள் நல பாதுகாப்புக்கு கழகத்தினரையும் கீழை நியூஸ் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!