தொடங்கியது கோடை.. தொடங்கியது தண்ணீர் பந்தல்.. தொடங்கி வைத்தது தவ்ஹீத் ஜமாத்..

இந்த வருடம் பங்குனி மாதம் தொடக்கம் முதலே வெயில் கடுமையாக தொடங்கி விட்டது. கடந்த வருடம் கோடை காலம் ஆரம்பம் ஆகிய பொழுது பல சமூக அமைப்பு முதல் அரசியல் கட்சி வரை தண்ணீர் பந்தல் அமைத்து பொது மக்களுக்கு தாகத்தை தீர்த்தனர்.

அந்த வகையில் இந்த வருடம் கோடை காலம் தொடங்கியவுடனே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் மோர் பந்தல் அமைத்து மக்களுக்கு தாகம் தீர்க்கும் வகையில் குளிர்ந்த குடிநீர் மற்றும் குடிநீர் வழங்க ஆரம்பித்துள்ளனர். இன்று (16-03-2018) வெள்ளிக்கிழமை தொழுகையை தொடர்ந்து தண்ணீர் பந்தலை தொடங்கினர்.