பட்டனம்காத்தான் பகுதியில் திருட்டு சம்பவம்..

இராமநாதபுரம் பட்டனம்காத்தான் பகுதியில் நான்கு சக்கர வாகனங்கள் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் தொழில் அதிபரின் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இனோவா கார் கண்ணாடியை உடைத்து பொருட்களை திருடியுள்ளனர்.

இச்சம்பவத்தில் கார் கண்ணாடியை உடைத்து மர்ம நபர்கள் ஐந்து லட்சம் ரூபாய் மற்றும் மடிக்கணினியை கொள்ளையடித்துச் சென்று விட்டனர்.

இச்சம்பவத்தை ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.