கீழக்கரை நலன் கருதி பல்வேறு அரசியல் மற்றும் சமூக அமைப்பினர் ஆணையரிடம் மனு..

கீழக்கரையில் கடந்த சில நாட்களாகவே கட்டுக்குள் அடங்காமல் நாய் தொல்லைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதுபோல் இரு சக்கர வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தியும் மக்கள் மத்தியில் கோரிக்கை வலுத்து வருகிறது.

இதன் அடிப்படையில் முன்னாள் சேர்மன் மற்றும் திமுக நகரச் செயலாளர் தலைமையில் காங்கிரஸ் பிரமுகர் அஜ்மால்கான், மக்கள் டீம் காதர் உட்பட பலர் கீழக்கரை பொறுப்பு ஆணையரை சந்தித்து மனு அளித்தனர்.

அதுபோல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாகவும் விளையாட்டு மைதானம் அருகில் அமைந்திருக்கும் குப்பைத்தொட்டியை அகற்ற கோரியும், சுற்றி திரியும் நாய்களை கட்டுப்படுத்த கோரியும் பொறுப்பு நகராட்சி ஆணையரிடம் புகார் மனு அளித்தனர்.