பிரியாணி கரையாக மாறி வரும் கீழக்கரை..

கீழக்கரை நகர் பாரம்பரியமும் பண்பாடும் மிகுந்த ஊர் என்றால் மிகையாகாது. சுவையான பாரம்பரிய உணவுகளுடன் விருந்தினர்களுக்கு பரிமாறி மகிழ்வித்து விருந்தோம்பலை பறைசாற்றி வந்த கீழக்கரையில் திடீர் விருந்தாளிகள் வந்தால் உணவுக்கு தடுமாறிய நிலை மாறி எந்த நேரத்திலும் சுவையான விதவிதமான பிரியாணி மற்றும் பல வெளிநாட்டு சுவையில் உணவு வகைகள் நினைத்த நேரத்தில் கிடைக்கிறது.

கீழக்கரையில் இன்றைய நிலை 30கும் மேற்பட்ட பிரியாணி கடைகள், பத்துக்கும் மேற்பட்ட கோழி மற்றும் மாட்டிறைச்சி கடைகள், பலதரப்பட்ட கபாப் வகை கடைகள், ஐரோப்பிய நாட்டில் கிடைப்பது போல் பல வகையான சான்ட்விச், நக்கட்ஸ், பர்கர், மில்க்சேக் வகைகள் விற்பனை செய்யும் உணவகங்கள்.

பிரியாணி என்றால் ஆம்பூர் பிரியாணி, திண்டுக்கல் பிரியாணி, தலப்பாகட்டி பிரியாணி, தம் பிரியாணி, அடுக்கு பிரியாணி, சீரகசம்பா பிரியாணி, மதுரை குஸ்கா பிரியாணி, அரேபியன் மந்தி பிரியாணி என பல வகையான பிரியாணி எந்த நேரத்திலும் கிடைக்கிறது. அதுபோல் சுவைக்கு சுவை சேர்ப்பது போல் விரைவில் கேரளா புகழ் மூங்கில் பிரியாணி மற்றும் மலேசியா புகழ் உணவு வகைகளும் கீழக்கரையில் வர இருப்பது பிரியாணி பிரியர்களுக்கு ஒரு சுவையான செய்தியாகும்.

உணவகத்தில் உணவு உண்பதே கீழக்கரையில் சிந்திக்க கூடிய காலமாக இருந்த நிலை மாறி இன்று வகை வகையான உணவுகளை உணவகங்களில் வாங்கும் நிலை மாறி இருந்தாலும், அந்த நிலையை தக்க வைப்பது ஒரே தரத்தில் என்றுமே உணவை வழங்குவதில்தான் உள்ளது. ஆரோக்கியமான வியாபார போட்டி என்றுமே லாபமான ஆரோக்கியம்தான்..