பொதுமக்கள் அஜாக்கிரதையா??.. திருடர்களின் கைவண்ணமா??..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் காவலர்கள் பற்றாகுறை ஒரு பக்கம். திருடர்கள் அதிகரிப்பு மறுபக்கம். கீழக்கரையின் ஒவ்வொரு நாளும் குற்ற செயல்களும் அதிகரித்த வண்ணமே உள்ளது. கீழக்கரையில் வளர்ந்து வரும் நகரங்களுக்கு நிகராக இருசக்கர வாகனங்களும் பெருகிய வண்ணம் உள்ளது. இதனால் இரு சக்கர வாகனம் மற்றும் வாகனத்தில் பெட்ரோல் திருடுபவர்களின் கைவண்ணம் அதிகரித்த வண்ணம் உள்ளது.

சமீபத்தில் கீழக்கரையில் இருசக்கர வாகனங்களை திருடும் நபர்கள் சில நாட்கள் பெட்ரோல் தீரும் வரை ஓட்டி விட்டு எங்காவது ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு சென்று விடுகிறார்கள். இது கை தேர்ந்த திருடர்களின் வேலையா அல்லது பொழுதுபோக்காக செய்பவர்களின் கைவண்ணமா என காவல்துறையினர் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்பாக உள்ளது.