கீழக்கரை தாசிம் பீவி கல்லூரி சார்பாக நுகர்வோர் விழிப்புணர்வு பேரணி.. கல்லூரியில் கீழை நியூஸ் சட்ட இயக்குனர் சிறப்பு உரை…

கீழக்கரையில் இன்று (15-03-2017) நுகர்வோர் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவிகள் சார்பாக சிறப்பு நுகர்வோர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் கல்லூரி மாணவிகள் நுகர்வோர் உரிமைகள் விளக்கங்கள் அடங்கிய பிரசுரங்களை வினியோகம் செய்தனர்.

இப்பேரணியை தொடர்ந்து கல்லூரியில் வணிகவியல் துறை மாணவிகளுக்கு “CONSUMER RIGHTS & PROTECTION” என்ற தலைப்பில் கீழை நியூஸ் சட்ட இயக்குனர் வழக்குரைஞர் AMD.முகம்மது சாலிஹ் ஹுசைன் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியின் வரவேற்புரையை வணிகவியல் துறை தலைவர் மற்றும் கல்லூரி துணை தலைவர் ரஜனி வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சுமையா, கல்லூரியின் வணிகவியல் மேலாண்மை துறை தலைவர் ஜாஸ்மீன், பேராசிரியை வாசுகி  மற்றும் இன்னும் பலர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் இறுதியாக வணிகஆட்சிவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவி ஆமினத் மதிஹா நன்றியுரை வழங்கினார்.