தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக மெகா போன் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம்…

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் (தெற்கு) மாவட்டம் கீழக்கரை தெற்கு கிளையின் சார்பில் 13-03-2018 அன்று கீழக்கரை நடுத்தெரு பகுதிகளில் பல இடங்களில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைபெற்றது.

இப்பிரச்சாரத்தில் கீழ்கண்ட தலைப்புகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் பொதுமக்கள் மத்தியில் செய்யப்பட்டது.

  • தேர்வை எதிர் கொள்ளும் பிள்ளைகளிடம் பெற்றோர்கள் கடைப்பிடிக்க வேண்டியவைகள்!
  • மொபைல் மூலம் திருடக்கூடிய திருடரிடம் ஜாக்கிரதை!
  • கர்ப்பிணி பெண்கள் PICME நம்பர் பெற வழிமுறைகள்!
  • எச்சரிக்கை வட மாநிலத்தவரிடம்!
  • மருத்துவ காப்பீடு திட்டத்தினை பயன்படுத்துவோம்.
  • சமூக வலைத்தளத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவோம் (தேவையற்ற லிங்க்களை க்ளிக் செய்யாதீர்கள்)
  • ஆம்புலன்ஸ் வாங்குவதன் அவசியம்.

இத்தலைப்புகளில் ஜமாத் பேச்சாளர்கள் பதுருஸமான் மற்றும் இக்ராமுல்லாஹ் ஆகியோர் பிரச்சாரம் செய்தனர். இந்த பிரச்சாரத்தை அதிகமான மக்கள் ஆர்வத்துடன் கேட்டு பயனடைந்தனர்.