இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் கருத்தரங்கு..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் கனடா இந்திய கூட்டுபயிலக திட்டத்தின் கீழ் புதிதாக சேர்க்கப்பட்ட கல்லூரிகளில் உள்ள தொழிற்சாலை கல்லுரி ஒருங்கனைப்பு பிரிவு மேலாளர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் தாளாளர் எஸ். எம். யூசுப் சாகிப் முன்னிலையிலும் கல்லூரி முதல்வர் டாக்டர் அ. அலாவூதின் தலைமையிலும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், தொடர் கல்வி மைய மேலாளர் மேஜர் நாகராஜன் அனைவரையும் வரவேற்றுபேசினார், குறு. சிறு. மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் உதவி இயக்குனர் ஜெரினா பப்பி பயிற்சியின் நோக்கம் குறித்து பேசினார். ஒசூர் அசோக் லேய்லேண்ட் லிமிடெட் நிறுவனத்தின் துணை மேலாளர், சுப்ரமணியன், பயோனியர் மின் நிலைய மேலாளர், கிருஷ்ணன் மற்றும், சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள் உதவி இயக்குனர் ஜெரினா பப்பி ஆ‌கியோ‌ர் ஆசிரியர் ஆசிரியைகளுக்கு பயிற்சி அளித்தனர். நிறைவு விழாவில் ஆசிரியர்களுக்கு கல்லூரியின் முதல்வர் டாக்டர் அ. அலாவூதின் சான்றிதழ் வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரியின் தொழிற்சாலை மற்றும் கல்லூரி ஒருங்கனைப்பாளர் பிரிவு மேலாளர் கோவிந்தன் மற்றும் தொடர் கல்வி மைய மேலாளர் இளமுருகு ஆகியோர் செய்திருந்தனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..