முத்தலாக் ஒழிப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு: வட மாநிலங்களில் பல்வேறு இடங்களில் இஸ்லாமிய பெண்கள் பேரணி…

ஒரே நேரத்தில் முத்தலாக் என்று கூறி மனைவியை விவாகரத்து செய்யும் கணவனுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியுள்ள முத்தலாக் முறையை ஒழிப்பதற்கான சட்ட மசோதா பாராளுமன்ற மக்களவையில் 28-12-2017 அன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதா சிறிய விவாதத்துக்கு பின்னர் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, எதிர்க்கட்சிகளின் ஒப்புதல் கிடைக்காததால் மாநிலங்களவையில் முடங்கியுள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் முத்தலாக் ஒழிப்பு சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜஸ்தான் மாநில தலைநகரான ஜெய்ப்பூரில் அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் சார்பில் 11-03-2018 அன்று இஸ்லாமிய பெண்கள் பேரணி நடத்தினர். அதேபோல் மகாராஷ்டிர மாநிலம் புனேவிலும் முஸ்லிம் பெண்கள் பேரணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.