கீழக்கரையில் திமுக செயல் தலைவர் ஸடாலின் அவர்களின் பிறந்தநாள் விழா…..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா நடைபெற்றது.மாவட்ட செயலாளர் திவாகரன் முன்னிலையில், கீழக்கரை நகர் செயலாளர் பஷீர் அகமது தலைமையில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் தலைமை செயற்குழு உறுப்பினர் அகமது தம்பி, அவைத்தலைவர் மணிகண்டன், நகர் துணைச்செயலாளர்கள் ஜமால் பாரூக், என்.பி.கே கென்னடி, நகர் இளைஞரணி முத்துவாப்பா, நகர் மாணவரணி அமைப்பாளர் ஹமீது சுல்த்தான், நகர் இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கெஜி, எபன், முன்னாள் கவுன்சிலர் சாகுல் ஹமீது, நகர் மாணவரணி துணை அமைப்பாளர் இப்திகார் உசேன், நகர் வர்த்த்க அணி ஏபிஎஸ்.ஜகுபர், நகர் செயற்குழு முகம்மது சுஐபு உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.