தாசீம்பீவீ அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் மகளிர் தின விழா..

கீகக்கரை தாசீம்பீவீ அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் நேற்று (08-03-2018) 11.00 மணியளவில் உலக மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. இறைவணக்கத்துடன் தொடங்கிய இந்நிகழ்வு கல்லூரி முதலவர் முனைவர் எஸ்.சுமையா வரவேற்புரை வழங்கினார். சென்னை சான்ட்விச் ஸ்கொயர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் முகமம்து தன்வீர் இக்பால் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தன்னுடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் பற்றியும் பெண்கள் தொழில் தொடங்குவதற்கான வழிமுறைகள் மற்றும் உத்திகள் பற்றியும் தொழில் தொடங்கி முன்னேற்றம் அடைவது எப்படி என்பது குறித்தும் தொழிலை எவ்வாறு கையாள வேண்டுமென்ற மேலாண்மை சூட்சமத்தையும் விளக்கி பேசினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் அரியா டைரி பார்மஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் ஆர்கான் பார்மஸ் நிறுவனத்தின் நிருவாக இயக்குநர் ஓசூர் அவர்களும் கலந்து கொண்டு பெண் இல்லையென்றால் உலகமே இல்லை; எண்ணம் போல் செயல் இருக்க வேண்டும்; எண்ணுவதை உயர்வாக எண்ணவேண்டும்; தொழில் தொடங்குவது எப்படி உள்ளிட்ட நற்சிந்தனை தலைப்புகளில் உரையாற்றினார்.

இதனை தொடர்ந்து பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண்கள் முன்னேற்றக் குழு சார்பாக நடத்தப்பட்ட கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் கல்லூரி துணை முதல்வர்கள் முனைவர் ஏ.இ.ஜி.சி. ரஜனி மற்றும் முனைவர் பி. சுலைஹா, கில் மற்றும் தேர்வாணையாளர் முனைவர் என். கௌரி ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியின் நிறைவாக செ. பாண்டி சசிகலா உதவிப்பேராசிரியை வணிகவியல்துறை ஆகியோர் நன்றியுரை வழங்க இனிதே விழா நிறைவுற்றது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை சீதக்காதி அறக்கட்டளை துணைப்பொது மேலாளர் சேக் தாவூத்கான் அவர்களும் மற்றும் பெண்கள் முன்னேற்றக் குழு உறுப்பினர்களும் செய்திருநத்னர்.

சத்தியபாதை மாத இதழ் ..

சத்தியபாதை மாத இதழ் ..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..