கீழக்கரையில் தவ்ஹீத் ஜமாத் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…

சிரியாவில் பிஞ்சு குழந்தைகள் உட்பட அப்பாவி முஸ்லீம் மக்களை கொன்று குவித்து வரும் சிரியா, ரஷ்யா, ஈரான் ஆகிய காட்டுமிராண்டி நாடுகளின் காட்டுமிராண்டித்தனத்தை கண்டித்தும், இந்த பிரச்சனையில் ஐக்கிய நாடுகளின் சபையினர் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வலியுறுத்தியும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) சார்பாக கீழக்கரை நகரில் இன்று (மார்ச் 9′ ஆம் தேதி)யன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கீழக்கரை நகராட்சி அலுவலகம் முன்பு 4.30 மணியளவில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில பேச்சாளர் முஹம்மது ஒலி கண்டன உரையாற்றினார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஆண்கள், பெண்கள், பள்ளி மாணவர்கள், சிறுவர்கள் என ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.