விபத்து ஏற்படுத்திய ஆய்வாளர் மீது இரட்டை கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி இராமேஸ்வரத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம்…

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் திருச்சியில் வாகன தணிக்கையின் போது தலைகவசம் அணியாமல் சென்ற தம்பதியை விரட்டி விபத்து ஏற்படுத்திய காவல் ஆய்வாளர் மீது வழக்கு பதிவு செய்ய கோரி ராமேஸ்வரத்தில் இந்து மக்கள் கட்சியினர் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தினர்.

கடந்த புதன்கிழமை திருச்சியில் கணவருடன் வாகனத்தில் சென்ற கர்ப்பிணி பெண் உஷா போக்குவரத்து காவல் ஆய்வாளர் தடுத்து நிறுத்திய போது வாகனத்தில் இருந்து கிழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வளையை ஏற்படுத்தியது. இதனை கண்டித்தும் இச்சவம்பவத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் மீது இரட்டை கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி இராமேஸ்வரம் நகர் இந்து மக்கள் கட்சி தலைவர் பிரபாகரன் தலைமையில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டது.

விழிப்புணர்வு பிரச்சாரத்தில் “காவல் துறை அதிகாரிகளே நான் தலை கவசம் அணியவில்லை எங்களை கொலை செய்து விடாதீர்கள்” “ எவ்வளவு பணம் வேண்டுமானலும் கொடுத்து விடுகிறோம்” “கருனை காட்டுங்கள்” என்ற வாசகங்கள் அடங்கிய பிரச்சார பதாகைகளை தங்களது இரு சக்கர வாகனங்களில் கட்டி கொண்டு இராமேஸ்வரம் திருக்கோவிலின் நான்கு ரத வீதிகளிலும் மற்றும் தீவு முழுவதும் வாகன பிரச்சாரமும், பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடமும் துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.

மேலும் சாலையில் பெண்களுடன் இரு சக்கர வாகனங்களில் தலை கவசம் அணியாமல் செல்லுபவர்களிடம் வாகனத்தை நிறுத்தி தலை கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

1 Comment

  1. காவல் ஆய்வாளர் தடுத்து நிறுத்தியபோது அல்ல “காவல் ஆய்வாளர் இரு சக்கர வாகனத்தை காலால் உதைத்து தள்ளியதால்” என்பதே சரியானது….

Leave a Reply

Your email address will not be published.