இறைத் தூதரை இழிவு படுத்தியவரை கைது செய்ய வலியுறுத்தி பாம்பன் பாலத்தில் சாலை மறியல்..

இராமநாதபுரத்தில் இஸ்லாமியர்களின் வாழ்கை முன்னுதாரணமாக திகழும் இறைத்தூதரை சில சமூக விரோதிகள் நல்லிணக்கதை குலைக்கும் விதமாக இந்து அமைப்பைச் சார்ந்த  சதீஷ் என்பவர் வலைதளங்களில் விமர்சனம் செய்து பதிவுகள் போட்டிருந்தார்.  இதைக் கண்டித்து இஸ்லாமியர்களும் தொடர்ந்த புகாரில் அவர் கைது செய்யப்பட்டு, சில மணி நேரங்களிலேயே எந்த ஆதாரமும் இல்லை என்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த செயலால் பாம்பன் நகரில் உள்ள மக்கள் கொந்தளித்த வண்ணம், இச்செயலில் ஈடுபட்டவரை கைது செய்ய வழியுறுத்தி தவ்ஹீத் ஜமாத், SDPI, மனித நேய மக்கள் கட்சி, மனித நேய ஜனநாயக கட்சியினர், மற்றும் இன்னும் பலர் பாம்பன் சாலை பாலத்தில் முஸ்லிம் சமுதாயத்தினர் நூற்றுக்கும் மேற்ப்பட்டவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் நெடுஞ்சாலை இருபுறங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது.

பின்னர் டி.எஸ்.பி மகேஷ் தலைமையில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் சதீஷை பிணையில் வெளி வராத வகையில் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்படுவார் என்ற உத்திரவாதம் அளித்ததை அடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.