சிரியாவில் அப்பாவி முஸ்லீம்களுக்கு இழைக்கப்படும் அநீதியை கண்டித்து கீழக்கரையில் கண்டன ஆர்ப்பாட்டம் – TNTJ சார்பாக ‘மார்ச் 9’ அறிவிப்பு

சிரியாவில் பிஞ்சு குழந்தைகள் உட்பட அப்பாவி முஸ்லீம் மக்களை கொன்று குவித்து வரும் சிரியா, ரஷ்யா, ஈரான் ஆகிய காட்டுமிராண்டி நாடுகளின் காட்டுமிராண்டித்தனத்தை கண்டித்தும், இந்த பிரச்சனையில் ஐக்கிய நாடுகளின் சபையினர் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வலியுறுத்தியும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) சார்பாக கீழக்கரை நகரில் எதிர்வரும் ‘மார்ச் 9’ ஆம் தேதியன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கீழக்கரை முக்கு ரோடு பகுதியில் 09.03.2018 அன்று வெள்ளிக் கிழமை மாலை 4.30 மணியளவில் நடைபெற உள்ள இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில பேச்சாளர் சகோ.முஹம்மது ஒலி கண்டன உரை நிகழ்த்துவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் மதம் அல்லது கட்சி சம்பந்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களோ, ஊர்வலங்களோ மூக்கு ரோட்டில் இருந்து கடற்கரை வரை நடத்துவதற்கு நீதி மன்ற தடை உத்தரவு அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.