கீழக்கரை ஹோட்டல்களில் பிளாஸ்டிக் கவர்கள் உபயோகத்தை தடை செய்ய கோரி ‘நாம் தமிழர்’ கட்சியினர் கோரிக்கை மனு

கீழக்கரை ஹோட்டல்களில் உணவு வகைகளை பார்சல் செய்வதற்கும், சாப்பாடு பரிமாறுவதற்கும் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தபடுகிறது, இதனால் பொதுமக்கள் முதலில் வயிற்று வலியில் ஆரம்பம் ஆகி அல்சர் கேன்சர் என்று பெரிய கொடிய நோய்களில் கொண்டு பொய் விட்டு விடுகிறது. அதே வேளையில் நம் பண்டைய கலாச்சாரமான உணவு பரிமாறுதலுக்கு வாழையிலை பயன்படுத்துவதால் விட்டமின் ஏ சத்துக்கள் உடலில் சேரும் இயற்கை விவாசாயமும் வளரும்.

இதனை கருத்தில் கொண்டு ஹோட்டல்களில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு வாழையிலை பயன்படுத்த கோரியும், பிளாஸ்டிக் கவர்களை உடனடியாக தடை செய்ய கோரியும் கீழக்கரை நகர் நாம் தமிழர் கட்சி சார்பாக நகராட்சி ஆனையரிடம் இன்று கோரிக்கை மனு அளிக்கபட்டது.

இது குறித்து நகராட்சி ஆணையர் கூறுகையில் ”பிளாஸ்டிக் விற்பனை செய்யக்கூடிய வணிகர்களை அழைத்து வெள்ளிகிழமை அன்று கூட்டம் நடத்த ஏற்பாடு செய்ய சுகாதாரத்துறை அலுவலர்களிடம் அறிவுறுத்தி உள்ளதாகவும் மேலும் இது குறித்து 15 நாட்களில் முழுமையான நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்துள்ளதாகவும்  தெரிகிறது.