அல் பையினா மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சி – புகைப்பட தொகுப்பு

கீழக்கரை கிழக்குத் தெரு அல் பையினா மெட்ரிக் பள்ளியில் கடந்த வாரம் ஆண்டு விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அல் பையினா கல்வி குழுமத்தின் துணை சேர்மன் முஹம்மது இக்பால் குழந்தைகளுக்கு அடிப்படை அஸ்திவாரமாக இஸ்லாமிய அடிப்படையில் கல்வி வழங்குவதன் அவசியம் குறித்து சிறப்புரை வழங்கினார்.

அதனை தொடர்ந்து அல் பையினா மெட்ரிக் பள்ளியின் தாளாளர் ஜாபிர் சுலைமான் அல் பையினா மெட்ரிக் பள்ளி கடந்து வந்த பாதை குறித்தும், பள்ளியின் எதிர்கால இலக்கு குறித்தும் விளக்கி பேசினார். முன்னதாக அல் பையினா மெட்ரிக் பள்ளியின் சட்ட ஆலோசகர் முஹம்மது சாலிஹ் ஹுசைன் வரவேற்புரை நிகழ்த்தினார். அதனையடுத்து பள்ளி மாணவ செல்வங்கள் பங்கேற்ற விழிப்புணர்வு நாடகங்களும், மாணாக்கர்களின் தனித் திறமைகளை வெளிக்கொணரும் நிகழச்சிகளும் சிறப்பாக நடைபெற்றது.

ஆண்டு விழா நிகழ்ச்சிகளை பள்ளியின் நிருவாக அதிகாரி ஹமீது பைசல் மற்றும் ஆசிரிய பெருந்தகைகள் சிறப்பாக செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் கிழக்குத்தெரு ஜமாத்தின் துணை பொருளாளர் முஹம்மது அஜிஹர் உள்ளிட்ட கிழக்குத் தெரு ஜமாஅத் நிர்வாகிகள், ஜமாஅத் அங்கத்தினர்கள், பள்ளி மாணவ மணிகளின் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். முன்னதாக பள்ளி மாணவர்களுக்கான பட்டமளிப்பு மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

பள்ளி மாணவர்களுக்கான பட்டமளிப்பு மற்றும் பரிசு கேடயங்களை அல் பையினா கல்வி குழுமத்தின் துணை சேர்மன் முஹம்மது இக்பால், கீழை முஹம்மது ஜமீல், கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை நிர்வாகி முஹம்மது மன்சூர், கிழக்குத் தெரு கைராத்துல் ஜலாலியா தொடக்கப் பள்ளியின் தாளாளர் ஜவஹர் சாதிக், ஜமாஅத் துணை பொருளாளர் முஹம்மது அஜிஹர், கிழக்குத் தெரு ஜமாஅத் அங்கத்தினர்கள் அய்யூப்கான், சமீம், கடற்கரை பள்ளி ஜமாஅத் நிர்வாகி ஜெமெக்ஸ் சுல்தான், தாளாளர் ஜாபீர் சுலைமான் பள்ளியின் சட்ட ஆலோசகர் முஹம்மது சாலிஹ் ஹுசைன், பள்ளியின் நிருவாகி ஹமீது பைசல்  உள்ளிட்டோர் வழங்கி மாணவ செல்வங்களை கவுரவித்தனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..