Home செய்திகள் பாம்பன் இரயில் தூக்கு பாலத்தின் தூண்களின் உறுதி திறன் குறித்து மத்திய இரயில்வே துறை முதன்மை பொறியாளர்கள் ஆய்வு ..

பாம்பன் இரயில் தூக்கு பாலத்தின் தூண்களின் உறுதி திறன் குறித்து மத்திய இரயில்வே துறை முதன்மை பொறியாளர்கள் ஆய்வு ..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் பாம்பன் இரயில் தூக்கு பாலத்தின் தூண்களின் உறுதி திறன் குறித்து மத்திய இரயில்வே துறை முதன்மை பொறியாளர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர் ஆய்வு அறிக்கையை வைத்து தூண்களை மாற்றி அமைப்பது குறித்து முடிவு செய்ப்படும் என அதிகாரிகள் தகவல்.

பாம்பன் ரயில் தூக்கு பாலத்தின் திறன் மற்றும் அதிர்வு குறித்து தென்னக ரயில்வே பாலங்கள் பராமரிப்பு மத்திய முதன்மை பொறியாளர் குழு ரயில் தூக்கு பாலம் பராமரிப்பு அதிகாரிகள் எக்கோ சவுன்ட் மற்றும் கணிணி தொழில் நுட்பக்கருவிகள் மூலம் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்

கடந்த 2006 ஆம் ஆண்டு மீட்டர் கேட்ஜ் இரயில் பாதையாக இருந்ததை அகல இரயில் பாதையாக மாற்றப்பட்டது. அப்போது பாம்பன் தூக்கு பாலத்தின் வலிமையை அதிகரிப்பதற்க்காக கடலின் நடுவே கான்ங்கிரிட் பில்லர்கள் அமைக்கப்பட்டது.அதன் பின்னர் இரயில்களின் வேகம் அதிகரிக்கபட்டு நடு பாலத்தில் 15 கி.மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் வரும் காலங்களில் இரயில்களின் வேகத்தை அதிகபடுத்தவும் இராமேஸ்வரத்திற்கு இயக்கப்படும் இரயில்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் தென்னக இரயில்வே முடிவு செய்துள்ளது எனவே பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் அமைந்துள்ள தூண்களின் உறுதி தன்மையை அதிகரிப்பது குறித்தும் தற்போது உள்ள நிலை குறித்து லக்னோவில் இருந்து மத்திய முதன்மை பொறியாளர் குழு கடந்த நான்கு நாட்களாக நவீன தொழில்நுட்ப கருவிகளை கொண்டு ஆய்வு நடத்தி வருகின்றது.

மேலும் தற்போது உள்ள தூண்களில் துளையிட்டு அதனின் அடர்த்தி மற்றும் உறுதி தன்மை குறித்து எடுக்கப்படும் இறுதி ஆய்வு அறிக்கையை வைத்து மத்திய இரயில்வே துறையின் கட்டுமான துறை புதிய பில்லர்கள் அமைக்க வேண்டுமா அல்லது பழைய தூண்களை பயன்படுத்தலாமா என்பது குறித்து முடிவு செய்யும்.புதிய தூண்கள் அமைக்கும் பணி தொடங்கினால் இராமேஸ்வரம் வரும் அனைத்து இரயில்கள் மண்டபத்துடன் நிறுத்தப்படும் என ஆய்வு நடத்தி வரும் பொறியாளர் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!