மண்டபத்தில் மீன்வள உதவி இயக்குனர் அலுவலகம் முற்றுகை…

மண்டபத்தில் விசைபடகு மீனவர்கள் மீது பொய் வழக்கு போடுவதை கண்டித்து மீன் வள உதவி இயக்குனர் அலுவலகத்தை மீனவர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றார்கள்.

மீனவர்களின் கேளிக்கைகளாக தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தியும், இரட்டை மடி மீன்பிடிப்பையும் தடை செய்ய வேண்டும் எனவும் மண்டபம் தென் கடல் பகுதியில் பாரம்பரியமாக மீன்பிடித்து வரும் விசைபடகு மீனவர்களை தென் கடல் பகுதியில் மீன்பிடிக்க கூடாது என்று கூறும் மீன் வள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மீன்பிடிப்பில் ஈடுபட்ட 10 விசை படகுகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்ய கோரியும், மண்டபத்தில் பாம்பன், தங்கச்சிமடம் பகுதிகளை சேர்ந்த வெளியூர் விசைபடகுகளை வெளியேற்ற கோரியும் மண்டபம் மீன்வள உதவி இயக்குனர் அலுவலகத்தை 200க்கு மேற்பட்ட மீனவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மண்டபத்தில் இருந்து M.P முருகேசன்

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image