பலநாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் போல பலநாள் ஆடு திருடன் பிடிபட்டான்..

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி,சிக்கல்,
இதம்பாடல்,ஏர்வாடி போன்ற பகுதிகளில் தொடர்ந்து ஆடுகளை திருடி செல்வதாக காவல்துறைக்கு புகார் வந்ததையடுத்து,கீழக்கரை டிஎஸ்பி ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் ஆடு திருடியவர்களை ரகசியமாக கண்காணித்தனர்.

இதையடுத்து திருடிய ஆடுகளை கீழக்கரை பகுதியில் உள்ள புருஷோத்தமன், ஜெய்னுலாப்தீன் போன்றவர்களிடம் விற்பனை செய்தாக தகவல் வந்தது. இதையடுத்து சிக்கல் அன்னிஉன்னி பகுதியை சேர்ந்த நாகராஜ் மற்றும் முருகன் ஆகியோருக்கு உதவிய ஆட்டோ டிரைவர் பழனி ஆகியோரிடம் சிக்கல் காவல் ஆய்வாளர் இளவரசன், சார்பு ஆய்வாளர் பிரசாத், கீழக்கரை குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை செய்த விசாரணையில் இவர்கள் பல்வேறு பகுதியில் 48 ஆடுகளை திருடியதாக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சமீப காலமாக 200 மேற்பட்ட ஆடுகள் திருடுபோனதாகவும் ஆடு திருடுபவர்கள் ஹைடெக்காக இன்னோவா கார்கள் போன்றவற்றில் ஆடு திருடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image