கீழை டைரி-9, கீழக்கரையில் புதியதொரு பன்முக நவீன அரங்கம்..

கீழக்கரையில் தினமும் பல அமைப்புகள் சார்ந்தும், வியாபார நிறுவனம் சார்ந்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்ற வண்ணமே உள்ளது. ஆனால் அதற்கேற்றார் போல் அனைத்து வசதிகளும் நிறைந்த அரங்கு என்பது குறைவாகவே இருந்து வந்தது. இக்குறையை போக்கும் வண்ணம் வரும் 27-02-2018, செவ்வாய் கிழமை அன்று மாலை கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு எதிரில் ரகுமத்து நினைவரங்கம் என்ற பெயரில் பன்முக செயல்பாடுகளுக்கு பயன் பெரும் வகையில் நவீன அரங்கம் திறக்கப்பட உள்ளது.

இந்த அரங்கின் சிறப்பம்சங்கள்:-

1. வியாபார கூட்டங்கள் மற்றும் கருத்தரங்கம் நடத்த அனைத்து வசதிகள்.

2. முகூர்த்தம், திருமண வைபவங்கள், நிச்சயதார்த்தம், வரவேற்புகள், குழந்தைகளுக்கு பிறந்த நாள் நிகழ்ச்சி, பெயர் சூட்டல் போன்ற குடும்ப வைபவங்கள் நடத்த வசதி.

3. தொழில் பயிற்ச்சிகள், வகுப்புகள் நடத்த தயார் நிலை.

4. வேலைவாய்ப்பு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டிய வசதிகள்.

5. கட்சி, சங்கம், அறகட்டளை, இயக்கங்கள் கூட்டம் நடத்த ஏதுவான அமைப்பு.

6. குழந்தைகளுக்கு பொழுது போக்கு அம்சங்கள் நடத்த சிறந்த பொழுது போக்கு பகுதிகள்.

7. மாணவர்களுக்கு கல்வி பயிளரங்கம் நடத்த அரங்கு வசதி.

8. வியாபாரிகளுக்கு பொருள் விற்பனை சந்தை நடத்த ஏதுவான முறையில் அரங்கு வடிவம்.

9. நண்பர்கள், மாணவர்கள் சநதிப்பு கூட்டம் நடத்த சிறந்த இடம்.

10. போதனைகள், அறிவுரை கூட்டங்கள் நடத்த அனைவரும் கலந்து கொள்ள வசதியான இட அமைப்பு.

அனைத்திற்கும் ஏதுவாக பல வசதிகளை தனி தனியே உள்ளடக்கிய ஒர் அரங்கமாக வடிவமைக்க பட்டுள்ளது. இந்த அரங்கினை அனைத்து மக்களும் பயன் பெறும் வகையில் பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு அறக்கட்டளை மூலம் சலுகை ஏற்படுத்தி தரப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது.

ரகுமத்து நினைவு அரக்கட்டளை,
முதல் தளம்
ஹம்னா வளாகம்
அரசு மருத்துவமனை எதிறில்
வள்ளல் சீதகாதி சாலை
கீழக்கரை.

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & @Amazon @Flipkart @Snapdeal