கச்சத்தீவு அந்தோனியர் ஆலய திருவிழா.. ஏராளமானோர் பங்கேற்பு..

கச்சத்தீவு விழாவில் பங்கேற்பதற்காக இந்தியாவில் இருந்து 1532 ஆண் பக்தர்களும், 336 பெண் பக்தர்களும், ஆண் குழந்தைகள் 29 மற்றும் பெண் குழந்தைகள் 23 பேர் என 1920 பக்தர்கள் இன்று நண்பகல் கச்சத்தீவு சென்றனர்.

இலங்கையில் இருந்து சிங்களம் மற்றும் தமிழ் பக்தர்கள் என 6500 பக்தர்கள் வந்திருந்தனர். இந்நிலையில் கச்சத்தீவு அந்தோனியார் ஆலயத்திற்கு சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான தேக்கு மரத்தால் ஆன 40 அடி உயரமுள்ள கொடி மரத்தை தமிழக பக்தர்களால் கொண்டு செல்லப்பட்டது.

இதனை தொடர்ந்து 40 உயரமுடைய கொடிமரத்தில் யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞாணபிரகாஷம் கொடி ஏற்றினார். இதில் தலைமன்னார், நெடுந்தீவு, யாழ்ப்பாணம், காலி மாவட்ட பக்தர்கள் மற்றும் பங்கு தந்தையர்கள் கலந்து கொண்டனர்.

கொடியேற்றத்தை தொடர்ந்து இன்றிரவு சிலுவை பாதை, தேர்பவனி, மற்றும் சிறப்பு திருபலிகள் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து நாளை காலை தேர்பவணி நடைபெற உள்ளது. அதன் பின் கொடியிறக்கம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 2103 பக்தர்கள் தங்களின் பெயர்களை பதிவேற்றம் செய்திருந்த நிலையில் இந்தியாவில் இருந்து 1920 பக்தர்கள் மட்டுமே கச்சத்தீவு சென்றுள்ளனர்.

இலங்கை – இந்திய தமிழ் பக்தர்களால் நிறைந்து காணப்படும் கச்சத்தீவு இந்த வருடம் சிங்கள பக்தர்களால் நிறைந்து காணப்பட்டது.

மண்டபம் செய்தியாளர் முருகேசன்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..