அலைக்கழிக்கப்படும் கர்ப்பிணிகள்…ஒரு பெண்ணின் குமுறல்…சமூக சேவகர்களுக்கும் ஓரு வேண்டுகோள் …

சமீபத்தில் தமிழக அரசாங்கத்தால் சிசு கொலை மற்றும் கர்ப காலத்தில் ஏற்படும் இறப்புகளை கட்டுப்படுத்துவதற்காக கொண்டு வந்த PICME (PREGNANCY INFANT COHORT MONITORING EVALUATION SYSTEM) எனும் முறை, பெண்களுக்கு நம்மதி தருவதை விட்டு, அதனுடைய வழி முறைகளே கர்பிணிப் பெண்களை மன உளைச்சலுக்கு உச்சக்கட்டத்துக்கு கொண்டு சென்று விடுகிறது. அந்த உளைச்சலில் ஏற்பட்ட வெளிப்பாடே கீழே ஒரு கர்ப்பிணி பெண்ணின் குமுறல்..

பெண்களுக்கு அளவில்லா மகிழ்ச்சியை தருகின்ற கர்ப்ப காலம்… இப்பொழுது எரிச்சலடைய செய்கிறது என்று சொல்லும் அளவிற்கு இந்த பிக்மி நம்பர் படுத்துகிறது.  பொதுவாக கர்ப்ப கால சோதனைகளுக்காக தத்தமது தேவைகளுக்கேற்ப, கர்ப்பிணிகள் மருத்துவமனைகளை தேர்வு செய்து கொள்வதுண்டு. இந்த தேர்வு வெயில் சாய்ந்த நேரம், கூட்டமின்மை, செல்வுகள் இவற்றை கவனித்து மருத்துவமனைகளை தேர்வு செய்வார்கள்.

அங்கு மாதம் ஒரு முறை சென்று குழந்தையின் விவரங்களை தெரிந்து கொண்டு வருவார்கள். ஆனால் இப்போது அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு கர்ப்பத்தை பதிவு செய்தே ஆக வேண்டும். அப்போது தான் பிக்மி என்ற எண்கள் தரப்படும். அது இருந்தால் தான் குழந்தை பிறந்ததும் பிறப்பு சான்றிதழ் கிடைக்கும் என சொல்லி அரசு மருத்துவமனைக்கு வரவழைக்கிறார்கள்.

சரி ஒரு பதிவு தானே ஒரு முறை சென்று பதிந்து விட்டு வந்திடலாம் என்று சென்றால். அங்கு காத்திருக்கிறது நமக்கான அழைக்களிப்புகள். ஒரு நாள் நமது விவரங்களை கேட்டு எழுதி கொள்கிறார்கள், மறுநாள் வந்து இரத்த பரிசோதனை, அடுத்த நாள் சிறுநீர் பரிசோதனை என நாட்களும், வேதனைகளும் நீண்ட வண்ணமே செல்கிறது.

இதையெல்லாம் கடந்து ஒரு நாளில் அதற்கான விடை கிடைக்கும் என்று எண்ணினால், அதுவும் கடக்கிறது பல நாட் கணக்கில். இவையெல்லாம் வாரக் கணக்கில் நடக்கும் என நினைத்தால் மீண்டும் எடை, உயரம், தடுப்பூசி பிற சோதனைகளை மாதக் கணக்கில் கடந்தால்தான் இந்த PICME எண். பிறகு எதற்கு தனியார் மருத்துவமனை, அதை இழுத்து மூடுங்கள். அரசு மருத்துவமனை எங்கள் உரிமை, ஆனால் அதை மருத்துவமனையாக மாற்றுங்கள், மனிதர்கள் நோய் தீர்க்கும் மனித நேயத்தின் பிறப்பிடமாக மாற்றியமையுங்கள். ஆனால் சுகாதாரத்தை அளிக்க வேண்டிய அரசு மருத்துவமனைகளோ நோய் பரப்பும் மையமாகவே திகழ்கிறது. இதற்கு முதலில் தீர்வு காணுமா அரசாங்கம்..

கர்ப்ப காலத்தில் வாந்தியுடனும் மயக்க நிலையிலும் இருப்போர் காலை வெயிலில் சென்று விட்டு திரும்புவதற்குள் இருக்கின்ற கொஞ்ச தெம்பையும் இழந்து PICME எண் கிடைத்து தனியார் மருத்துவமனைக்கு செல்லும் முன்பே பிரவமாகிவிடுமோ என்றை மனதிலேயே ஒரு பிரசவத்திற்கான அவல நிலை…

சமூக பணி செய்யும் சமூக சேவகர்களே! நாங்களும் இந்த சமூகத்தின் ஓரு அங்கம்தான். எங்களுக்காகவும் குரல் கொடுத்து கற்பிணிகளின் அலைகழிப்புக்கு தடைஏற்படுத்துங்கள்…

இப்படிக்கு.. கர்ப்பிணிப்பெண்…

புனித ரமலான் வாழ்த்துக்கள்..