தமிழன் தொலைக்காட்சி கௌரவித்த இஸ்லாமியா பள்ளி மாணவன்..

தமிழகத்தில் உள்ள தமிழன் தொலைகாட்சி வருடந்தோறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை ஊக்குவிக்கும் வண்ணமாக தனித்திறமை விருதுகளை வழங்கி வருகிறது.

இந்த வருடத்திற்கான விருது கடந்த 14-02-2018 அன்று சென்னையில் வழங்கப்பட்டது. இதில் கீழக்கரை இஸ்லாமியா பள்ளி 11ம் வகுப்பு, தெற்கு தெரு மாணவன் ரினாஸ்தீன் “விளையாட்டு வீரர் மாணவர்” என்ற 2017ம் ஆண்டுக்கான விருதினை பெற்றார்.

இவ்விருதை நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் சென்னையில் நடந்த விழாவில் வழங்கினார். இம்மாணவர் இஸ்லாமியா பள்ளி வாலிபால் அணியின் தலைவராக மாநில அளவு போட்டிகளில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இவரை பள்ளியின் தாளாளர் மற்றும் பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரிய பெருமக்கள் வாழ்த்தினர்.