ஆளுமை திறனுக்கு பேச்சு அவசியம், அவசியத்தினை கற்றுக் கொடுக்கும் ஈமான் அமைப்பு..

ஐக்கிய அரபு அமீரகத்தில் இயங்கி வரும் ஈமான் கலாச்சார மையம் இரத்த தான முகாம், இப்தார் நிகழ்ச்சி போன்ற பல் வேறு சேவைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வரிசையில் சிறந்த ஆளுமைகளை உருவாக்கவும், பேச்சு திறன்களை வளர்க்கவும் பயிற்சி பட்டறை முகாம் ஏற்பாடு செய்துள்ளனர்.

இப்பயிற்சி பட்டறை நிகழ்ச்சியை பயிற்சியாளர் குணா 19-02–2018 அன்று துவங்கி வைத்து மேடைப் பேச்சின் நுணுக்கங்களை தனக்கே உரிய பாணியில் நகைச்சுவையாக விளக்கி அனைவரையும் கவர்ந்தார். இவர் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் ஆற்றல் பெற்றவர் என்றால் அது மிகையாகாது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக அரேபியா ஹோல்டிங் நிறுவனத்தின் துணைத்தலைவரும், ஈமான் சங்கத்தின் தலைவருமான ஹபீபுல்லாஹ் கான், வெஸ்டர்ன் ஆட்டோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஏ.ஜே.கமால், காங்கிரஸ் கட்சியின்  மூத்த உறுப்பினர் எஸ்.எம்.ஹிதாயத்துல்லாஹ், ஈமான் துணைத்தலைவர் மஃரூப், சமூக ஆர்வலர் அப்துல் ரவூஃப், முன்னாள் ஜெயா டிவியின் செய்திவாசிப்பாளர் ரஃபீக் சுலைமான், லேண்ட் சோன் நிறுவனர் சேனி ஆகியோர் பங்கு பெற்றனர்.  இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக பேச்சுப் பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு தனித்தனியாக தலைப்பு கொடுக்கப்பட்டு 2 மட்டும் நிமிடம் பேச அனுமதிக்கப்பட்டது. இப்போட்டியில் சிறப்பாக பேசிய மூன்று நபர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. இதில் ஏராளமானோர் ஆர்வத்தோடு கலந்து கொண்டு பயன்பெற்றனர். போட்டி நிறைந்த இன்றைய காலகட்டத்தில் கல்வியை கற்று மதிப்பெண் எடுத்தால் மட்டும் போதாது மொழித் திறனையும் வளர்த்து கொள்வது காலத்தின் கட்டாயம் என்பதை அழகிய முறையில் பயிற்ச்சியாளர் குணா வழியுறுத்தினார். வேலை பளூவுக்கு மத்தியிலும் நேரம் ஒதுக்கி பலர் ஆர்வமாக கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியை ஈமான் அமைப்பின் பொது செயளாலர் ஹமீது யாஸீன் தொகுத்து வழங்கினார். துணைத்பொதுச்செயளாலர் முஹைதீன், ஊடகத்துறை செயளாலர் முதுவை ஹிதாயத்துல்லாஹ், நிஜாம், பைரோஸ், அசார் உள்ளிட்ட பலர் ஏற்பாடுகளை செய்திருந்தனர், விழாக்குழு இணைச் செயளாலர் நஜீம் நன்றி உரை  கூறி நிறைவு செய்தார்.

புகைப்படத் தொகுப்பு..

புனித ரமலான் வாழ்த்துக்கள்..

1 Comment

Comments are closed.