சட்டக் கல்லூரிகளுக்கு இடையிலான அகில இந்திய கைப்பந்து போட்டியில் சிறந்த வீரர் பட்டம் பெற்ற கீழக்கரை மாணவன்..

கீழக்கரை வடக்குத் தெரு ஜஹுபர் அலி (சிங்கப்பூர் டிராவல்ஸ்) மகன் ஜாகித் ரிஃபாய். இவர் செங்கல்பட்டு சட்டக்கல்லூரியில் பட்டப்படிப்பு பயின்று வருகிறார். இவர் நீண்ட நாட்களாக கல்லூரியின் கைப்பந்து அணி சார்பாக விளையாடி வருகிறார்.

கடந்த வாரம் கொல்கத்தாவில், அகில இந்திய சட்டக்கல்லூரிகளுக்கான போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் செங்கல்பட்டு சட்டக்கல்லூரி அணி, இறுதிப்போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது.

மேலும் செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவரான ஜாகித் ரிஃபாய் சிறந்த வீரருக்கான சிறப்பு பரிசையும் வென்றார். அவருக்கு மற்ற அணி வீரர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகம் வாழ்த்துக்கள் தெரிவித்து பாராட்டினர்.

1 Comment

Comments are closed.