Home செய்திகள் “பைத்துல் ஹிக்மா”, தமிழக இஸ்லாமிய சமுதாயத்தின் ஒரு மைல் கல்…

“பைத்துல் ஹிக்மா”, தமிழக இஸ்லாமிய சமுதாயத்தின் ஒரு மைல் கல்…

by ஆசிரியர்

ஒரு சிறந்த சமுதாயம் உருவாக மிகவும் அடிப்படையான விசயம், தரமான கல்வியாகும், நாட்டின் முன்னேற்றத்திற்காக  சொத்துக்களும், சுகங்களையும் வாரி வழங்கிய இஸ்லாமிய சமுதாயம் இன்று முறையான கல்வியறிவு இல்லாத காரணத்தினால் பின் தங்கிய நிலையிலேயே உள்ளனர்.

இதன் அடிப்படையிலேயே தமிழக முஸ்லிம்களின் அறிவுப் பாதையை சீர்படுத்தும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் தொலைதூர பயணத்தில் ஒரு மைல்கல் ஆக “பைத்துல் ஹிக்மா” உருவெடுத்துள்ளது.

பைத்துல் ஹிக்மா கல்வி நிறுவனம் முஸ்லிம் உம்மத்தின் இன்றைய மற்றும் எதிர்கால தேவையின் அடையாளமாக வடிவமைக்கப் பட்டிருக்கிறது. இந்த நிறுவனத்தின் கட்டிடப்பணிகள் துவக்க  நிகழ்ச்சி நிறுவனம் அமைய உள்ள புதுவை மாநிலம் கடுவனுரில் நடைபெற்றது.

இந்த முக்கிய்நிகழ்வில் உலமாக்கள், நீதியரசர்கள், கல்வியாளர்கள், ஜமாத் பொறுப்பாளர்கள், சமுதாய புரவலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதகள் என ஏராளமான சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட மக்கள் கலந்து கொண்டனர்.

இந்த பைத்துல் ஹிக்மா கல்வி நிறுவனம் முஸ்லிம்களிலும், பிற சமூககத்திலும் தகுதி வாய்ந்த மாணவர்களை தேர்வு செய்து அவர்களை சட்ட வல்லுனர்களாக, அரசின் உயர் அதிகாரிகளாக, சிறந்த இதழியலாளர்களாக, சர்வதேச தொழில் முனைவோர்களாக உருவாக்கும் இலக்கோடு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இப் பைத்துல் ஹிக்மா கீழ்க்கண்ட கல்வி நிறுவனங்களை உள்ளடக்கியதாக உருவாக உள்ளது.

👉Jamiathul Hikma Arabic College 👉Kaleefa Omar School of Law 👉Mahatma Gandhi – Moulana Azad college of Arts & Sc. 👉Indo – Arab School of Business.

————-/////————/////—————/////—-

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!