கீழக்கரையில் ‘KEELAI NEWS BLOOD APP’ அறிமுக விழா நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது – அனைவரும் பங்கேற்க அழைப்பிதழ்

கீழக்கரை நகரில் அவசர கால இரத்த தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அவசர அறுவை சிகிச்சைகள், எதிர்பாராத விபத்து, டெங்கு, வைரஸ் காய்ச்சல், இரத்த அணு குறைபாடு போன்றவற்றினால் பாதிக்கப்படும் மக்கள், தங்களுக்கான இரத்த வகைகள் கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் கீழக்கரை, இராமநாதபுரம் சுற்றுவட்டாரங்களில் இரத்த தானம் செய்ய விரும்புபவர்களும், இரத்தம் தேவைப்படுவர்களும் இலகுவாக சந்தித்து பயனடைவதற்கு ஏதுவாக கீழை நியூஸ் சார்பாக ‘KEELAI NEWS BLOOD APP’ அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்த ‘KEELAI NEWS BLOOD APP’ அறிமுக விழா நிகழ்ச்சி நாளை (16.02.18) வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் ஆலீம் புலவர் பவாஸ் வணிக வளாக கட்டிடத்தில் இயங்கும் சினர்ஜி இன்டர்நெஷனல் கல்வியகத்தில் (முஸ்லீம் பஜார் பீஸா பேக்கரி மேல்தளம்) நடைபெற உள்ளது. இந்த நல்ல நிகழ்ச்சியில் உள்ளூரில் இருக்கும் அனைத்து சமுதாய மக்களும், ஜமாத்தினர், சமூகநல அமைப்பினர், பொதுநல சங்கத்தினர், சமுதாய இயக்கத்தினர், அரசியல் கட்சியினர் அனைவரும் இதனையே அழைப்பிதழாக ஏற்று தவறாது கலந்து கொண்டு அறிமுக விழா நிகழ்ச்சியினை சிறப்பித்து தருமாறு கீழை நியூஸ் நிர்வாகம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

All Your Home Needs @ One Place

All Your Home Needs @ One Place

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image