கீழை டைரி -8, இயற்கையின் பக்கம் அழைத்துச் செல்லும் “கீழை மரச் செக்கு எண்ணெய்”…

அவசரமான நவீன உலகில், மக்களுக்கு ஆரோக்கியத்தின் மீதிருந்த அக்கறை குறைந்து எல்லாம் அதி வேகமாக கிடைக்க வேண்டும் என்ன எண்ணத்திலேயே ஓடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த ஓட்டத்தில் வாழ்கையை இழந்தவர்களாக. ஆனால் அது போன்ற மக்களின் கவனத்தை ஈர்த்து இயற்கை உணவை மக்களுக்கு வழங்கி வருகிறார்கள் “கீழை மரச் செக்கு எண்ணை”..

இங்கு இயற்கையான முறையில் தயாரிக்கும் நல்லெண்ணை, கடலை எண்ணை, சுத்தமான நெய் அத்துடன் அனைத்து விதமான இயற்கை உணவு வகைகளும் விற்பனை செய்யப்படுகிறது.

நமது முன்னோர்கள் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணை வகைகளையும் இயற்கையான முறையிலேயே தயாரித்து இருக்கிறார்கள். எள், தேங்காய், கடலை ஆகியவற்றை உலரவைத்து, மரசெக்கும் மூலம் எண்ணெய்களை உருவாக்கி பயன்படுத்தி இருக்கிறார்கள். மருத்துவ குணம் நிறைந்த வாகை மரத்தினால் மர செக்கு செய்யப்படுகிறது. அந்த மர உரலில் மட்டை பூட்டி இயக்க செய்து அவற்றில் உலர வைத்த எள், தேங்காய், கடலை ஆகியவிற்றை போட்டு ஆட்டி எண்ணெய் தயாரிக்கிறார்கள். இது இயற்கை மற்றும் மருத்துவ குணம் நிறைந்தது.

இன்றைய காலகட்டத்தில் அன்றாட சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய எண்ணெய் வகைகள் செயற்கை முறையில் சுத்திகரிக்கப்பட்டதாகவே இருக்கின்றன. அப்படி சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யில் இயற்கை நிறத்தையும், கொழப்புத் தன்மையையும், கொழுப்புச் சத்தையும் நீக்குவதற்காக சோப்பு தயாரிக்க பயன்படும் காஸ்டிக் சோடா என்ற சோடியம் ஹைடிராக்சைடு, பீளிச்சிங் பவுடர் ஆகியவற்றை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

ஆனால் மரச்செக்கிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெய்களில் ஊட்டச்சத்துகள், உயிர்ச்சத்துகள், புரோட்டீன்கள், வைட்டமின்கள், இரும்பு சத்து, நார் சத்து, தாது பொருட்கள், கால்சியம் உள்பட பல சத்துக்கள் கொண்டதாக இருக்கிறது. உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு சத்துக்களும் அதிகமாக அடங்கியிருக்கின்றன.

கீழை மரச் செக்கு” நிறுவனத்தினர் வாடிக்கையாளர்களுக்கு பொருட்ளைகளை வெளியூர்களுக்கும் எந்த கூடுதல் செலவும் இல்லாமல், இலவசமாகவே அனுப்பி வைக்கிறார்கள். அதே போல் வெளிநாடுகளுக்கு எடுத்து செல்பவர்களுக்கு இலகுவாக உணவுப் பொருட்களுக்கு எந்த வித கேடும் வராத வகையில் ஆழகிய முறையில் தயார் செய்து வாடிக்கையாளர்களை திருப்திபடுத்துவது “கீழை மரசெக்கு எண்ணெய்” நிறுவனத்தின் கூடுதல் சிறப்பாகும்.

https://youtu.be/VyBhfFM1iCc

புனித ரமலான் வாழ்த்துக்கள்..

3 Comments

  1. இறைவன் அருளால் நன்றாக வளர்ச்சி அடைந்து அனைவரும் பயன் பெற வாழ்த்துக்கள்.

  2. சொந்த ஊரில் சுயதொழில் வாழ்த்துக்கள் ப்ரோ, நல்லவேலை பிரியாணி கடை போடாமல் விட்டது.

  3. டோர் டெலிவரி பண்ணுவோம் என்றவர்கள், ஃபோன்ல ஆர்டர் வாங்கிக் கொண்டு டெலிவரி கொடுக்கவில்லை என்கிற குறை இருக்கிறது.

Comments are closed.