ம.ம.க 10வருட தொடக்கத்தை முன்னிட்டு பேராசிரியர் பல் வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்..

மனித நேய மக்கள் கட்சியின் 10வருட தொடக்கத்தை முன்னிட்டு பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் கீழக்கரைக்கு வருகை தந்திருந்தார்.

நிகழ்ச்சியின் தொடக்கமாக கீழக்கரை ஜும்மா பள்ளி அருகில் ம.ம.க கொடியை பேராசிரியர் ஜவாஹிருல்லா ஏற்றி வைத்தார். பின்னர் அதைத் தொடர்ந்து கமுதி பால் கடை அருகில் பிராச்சாரமும் மேற்கொண்டார். இப்பிரச்சாரத்தின் போது பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், மீனவர்களை பாதிக்க கூடிய சாகர்மாலா திட்டத்தை கை விட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் ம.ம.க அமைப்புச் செயலாளர் தாம்பரம் யாகூப், மாநில துணைப் பொதுச்செயலாளர் முகம்மது கெளஸ், மாவட்ட தலைவர் அன்வர், மாவட்ட துணை செயலாளர் சிராஜ்தீன், நகர் தலைவர் பாதுஷா மற்றும் அப்ரோஸ், இக்பால், லக்கி அடுமை ஆகியோர் உட்பட ஏராளமான ம.ம.க, தமுமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.