கீழக்கரையில் வாலிபால் சீசன்.. வடக்கு தெரு ஜதீத் க்ளப் நடத்தும் மாநில அளவிளான போட்டி..

கீழக்கரையும் வாலிபால் போட்டியும், கீழக்கரை கலாச்சாரத்துடன் ஊறிப்போனது என்றால் மிகையாது. அந்த அளவுக்கு ஒவ்வொரு தெருவிலும் அணிகள் உண்டு. அதே போல் மாநில அளவு போட்டிகள் என்றால் எல்லா தெரு வீரர்களும் இணைந்து விளையாடி கோப்பைகளையும் வென்று வருவார்கள்.

ஜதீத் கிளப் தொடங்கி 25ம் வருட வெள்ளி விழாவை முன்னிட்டு வரும் பிப்ரவரி 17 மற்றும் 18 தேதிகளில் கீழக்கரை வடக்குத் தெரு அல்ஜதீத் வாலிபால் கிளப் சார்பாக மாநில அளவிளான போட்டி, வடக்குத் தெருவில் உள்ள மணல்மேடு மைதானத்தில் மின்னொளி போட்டியாக நடைபெற உள்ளது.

இப்போட்டியில் வெல்பவர்களுக்கு பரிசாக 50,018/- 30,018/-, 20,018/-, 10,018/- முறையே முதல் பரிசு முதல் நான்காம் பரிசு வரை வழங்கப்படுகிறது. அதே போல் கால் இறுதி வரை வரும் அணிகளுக்கு தலா 1,500/- வரை வழங்கப்படுகிறது.

இப்போட்டி சம்பந்தமான மேல் விபரங்களுக்கு 8248958059, 9629156318, 9789604125, 9944842006 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.