கீழக்கரையில் ‘THAI ZET’ விளையாட்டு குழு நண்பர்கள் நடத்தும் மாவட்ட அளவிலான மின்னொளி வாலிபால் போட்டி நாளை துவங்குகிறது.

கீழக்கரை ‘THAI ZET’ விளையாட்டு குழு நண்பர்கள் சார்பாக மாவட்ட அளவிலான மின்னொளி வாலிபால் போட்டி நாளை (11.02.18) தெற்குத் தெரு கிஷ்கிந்தா விளையாட்டு மைதானத்தில் மாலை 5 மணியளவில் துவங்குகிறது. இந்த மாவட்ட அளவிலான போட்டியில் 15 க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்கின்றன. விழா நிறைவு நிகழ்ச்சியில் இஸ்லாமியா கல்வி நிறுவனங்களின் தாளாளர் முகைதீன் இபுறாகீம் தலைமை ஏற்கிறார். சிறப்பு விருந்தினராக இராமநாதபுரம் கூடுதல் காவல் துணை கண்பாணிப்பாளர் வெள்ளத்துரை பங்கேற்கிறார்.

தெற்குத் தெரு ஜமாஅத் பரிபாலன கமிட்டியின் செயலாளர் சயீத் இபுறாகீம் வாழ்த்துரை வழங்குகிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சியில் நகர் செயலாளர் யூசுப் சாகிப் சிறப்புரை ஆற்றுகிறார். நன்றியுரை கெஜி என்கிற கெஜேந்திரன் பேசுகிறார். போட்டியில் வெற்றி பெறும் விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் அணிகளுக்கு பரிசினையும், சேம்பியன் கோப்பையையும் கீழக்கரை நகரின் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று வழங்கி கவுரவிக்கின்றனர்.

1 Trackback / Pingback

  1. “THAI ZET” வாலிபால் போட்டி தொடங்கியது.. - NEWS WORLD - www.keelainews.com (உலக செய்திகளின் நுழைவு வாயில்… நிஜங்களின் நிதர

Leave a Reply

Your email address will not be published.