இஸ்லாமிய கல்வி சங்கம் சார்பாக நடைபெற்ற இஸ்லாமிய தெருமுனை பயான் நிகழ்ச்சி

இஸ்லாமிய கல்விச் சங்கத்தின் சார்பாக தெருமுனை பயான் நிகழ்ச்சி நேற்று (10.02.18) இரவு 8:30 மணியளவில் ஆடறுத்தான் தெருவில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இஸ்லாமிய கல்விச் சங்கத்தின் தலைவர் ஆலிம் சட்டப் போராளி தவ்ஹீத் ஜமாலி சிறப்புரையாற்றினார். அதை தொடர்ந்து அல் மத்ரஸத்துர் ராழியாவின் மாணவர் முஹம்மது ரித்வான் மாணவர் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் அதிகளவிலான பெண்களும் மாணவர்களும் கலந்து கொண்டு பயன் பெற்றனர். நிகழ்ச்சியின் இறுதியில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த தாய்மார்கள் மற்றும் மாணவர்களுக்கு சங்கத்தின் ஆலோசகர் சகோதரர் அப்பாஸ் கான் அவர்கள் பரிசுகளை வழங்கினார்.