முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் வளாக தேர்வு மூலம் 103 மாணவர்கள் தேர்வு…

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் இயந்திரவியல் மற்றும் மின்னனியல் துறையை சார்ந்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் விதத்தில் வளாக நேர்முக தேர்வு நடைபெற்றது.

இந்நிகழ்வின் தொடக்கமாக கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் டாக்டர் அ. அலாவூதின் தலைமையுரையாற்றினார், துணை முதல்வர் பேராசிரியர் சேக்தாவூத், வாழ்த்துரை வழங்கினார், அதைத் தொடர்ந்து மின்னணுவியல் துறை விரிவுரையாளர் மரியதாஸ் அனைவரையும் வரவேற்றுபேசினார்.

இந்த முகாமில், சென்னை லுகாஸ் டி. வி. எஸ், பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின், மனிதவள மேம்பாட்டுதுறை முதுநிலை அதிகாரி வி. பி. ரமேஷ், வளாக நேர்முக தேர்வினை நடத்தினார். இதில் 165 மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த வேலைவாய்ப்பு முகாமில் இறுதியாண்டு பயிலும் இயந்தரவியல் துறையில் 51 மாணவர்களும் மின்னனியல் மற்றும் மின்னணுவியல் துறை சார்ந்த 52 மாணவர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு வருடம் 1,20,000, ஊதியம் வழங்கப்படும் என நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதுவரை நடைபெற்ற வளாக தேர்வு மூலம் 297, மாணவர்கள் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த வளாக தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரியின் துணை முதல்வர் சேக்தாவூத் மற்றும் இயந்தரவியல் துறை தலைவர், கணேஷ்குமார் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..