கீழை டைரி 5, கீழக்கரையில் சர்வதேச சுவையில் திண்பண்டங்கள் – அதுதான் “ஆமீர் தயாரிப்புகள்”..

கீழக்கரையில் சமீபத்தில் அழகிய முறையில் பேக் செய்யப்பட்டு சந்தைக்கு வந்திருக்கும் பொருள்தான் “AAMIR FOODS”. இந்நிறுவனம் சுவையான முறுக்கு, ரிப்பன் பக்கோடா காரச்சேவ் வகைகள் மற்றும் குளோப் ஜாமுன் வீட்டிலேயே கை பக்குவத்தில் தயாரிக்கப்பட்டு சர்வதே சந்தையில் கிடைக்கும் சுவையுடன் விற்பனைக்கு கீழக்கரை பகுதிக்கு வந்துள்ளது.

இது சம்பந்தமாக இதன் உரிமையாரை சந்தித்த பொழுது, இந்நிறுவனத்தின் உரிமையாளர் பல வருடங்கள் சவுதி அரேபியாவில் உலக அளவில் பிரபலமான உணவு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார், அந்த அனுபவத்தின் அடிப்படையிலேயே கீழக்கரையிலும் அதே தரத்தில் உணவு பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறார்.

மேலும் அவர் கூறுகையில், அவருடைய வீட்டில் பெண்களுக்காக பெண்களால் அனைத்து விதமான நோய்களுக்கும் இயற்கை ரீதியான மருந்துவ ஆலோசனை வழங்கப்படுவதாகவும் கூறினார்.

வெளிநாட்டில் பல வருடங்கள் பணிபுரிந்து விட்டு, சொந்த ஊருக்கு வரும் பொழுது என்ன தொழில் புரிவது என அறியாமல் பல அன்பர்கள் இருக்கும் வேலையில், தான் பணிபுரிந்த வேலையையே, தொழிலாக மாற்றி மக்களுக்கு தரமான உணவு பொருட்களை தந்து கொண்டிருக்கும் இந்நிறுவனத்தை நிச்சயமாக நாம் பாராட்டியே ஆக வேண்டும். இவரின் தயாரிப்புகளை பெற 9944514665 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.