பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை..

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின்  (POPULAR FRONT OF INDIA – PFI)  சார்பாக ஆண்டு தோறும் கல்லூரியில் படிக்கும் ஏழை மாணவ, மாணவிகளுக்கு அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் சுமார் 8 இடங்களில் கல்வி உதவித் தொகை வழங்கும் முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக இன்று திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரில் இந்த முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் S.M.திப்புசுல்தான் தலைமை தாங்கினார்கள். இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத்துறை மாநில ஒருங்கிணைப்பாளர் A.முகம்மது இப்ராஹிம் M.Com (CA) MBA முன்னிலை வகித்தார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ்மாநில செயலாளர் A.முகைதீன் அப்துல் காதர் M.Sc(IT) சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார், S.N.மீரான் MBA அக்சஸ் இந்தியா பயிற்சியாளர் மாணவர்களுக்கு கல்வி, ஒழுக்கம், மற்றும் முன்னேற்றம் தொடர்பாக பயிற்சியளித்தார்.

நிகழ்ச்சியின் இறுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கடையநல்லூர் நகரத் தலைவர் I.சேக் பரித் நன்றி உரையாற்றினார்.