Home செய்திகள்கீழக்கரை செய்திகள் வார்டு மறுவரையறை பட்டியல் குளறுபடி குறித்து கருத்து கேட்பு கூட்டம் மதுரையில் ‘பிப்ரவரி 6’ நடைபெறுகிறது – மனுதாரர் அனைவரும் பங்கேற்க கீழக்கரை சட்டப் போராளிகள் அழைப்பு

வார்டு மறுவரையறை பட்டியல் குளறுபடி குறித்து கருத்து கேட்பு கூட்டம் மதுரையில் ‘பிப்ரவரி 6’ நடைபெறுகிறது – மனுதாரர் அனைவரும் பங்கேற்க கீழக்கரை சட்டப் போராளிகள் அழைப்பு

by keelai

கீழக்கரை நகராட்சியில் வார்டு மறு வரையறை பட்டியல் தயாரிக்கப்பட்டதில் பல்வேறு குளறுபடிகளை நகராட்சி ஆணையாளர் மற்றும் இளநிலை ஊழியர்கள் செய்துள்ளனர். இந்த குளறுபடியான வார்டு மறுவரையரை பட்டியலை உடனடியாக திரும்ப பெற கோருதல் சம்பந்தமாக, கீழக்கரையில் அனைத்து கட்சி கூட்டம் கடந்த 01.01.2018 அன்று ஹுசைனியா மஹாலில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கீழக்கரை நகரை சேர்ந்த பொதுநல அமைப்பினர், சமுதாய இயக்கத்தினர், ஜமாத்தினர், அரசியல் கட்சியினர் 02.01.2018 அன்று இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை நேரடியாக சந்தித்து குளறுபடியான வார்டு மறுவரையரை சம்பந்தமான குற்றச்சாட்டுகளையும், கோரிக்கைகளையும் வைத்தனர்.

*குற்றச்சாட்டுகள்* 👇

1. பொதுமக்கள் தங்கள் ஆட்சேபனையை தெரிவிக்க போதுமான கால அவகாசம் தரப்படவில்லை

2. கீழக்கரை நகரில் இருக்கும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வார்டு மறு வரையறை பட்டியலின் நகல்கள் வழங்கப்படவில்லை

3. கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தினரால் முறையாக பொது அறிவிப்பு செய்யப்பட வில்லை.

4. தகுதியற்றவர்களை கொண்டு வரையறை செய்யப்பட்டுள்ளதால் வார்டு மறு வரையறை பட்டியலில் ஏகப்பட்ட குளறுபடிகளை செய்துள்ளனர்

5. வார்டு மறு வரையறை பட்டியலின் அடிப்படையாக இருக்கும் கீழக்கரை மக்கள் தொகையை சட்ட விதிமுறைகளுக்கு முரணாக குறைத்து மதிப்பிட்டு உள்ளனர்.

*கோரிக்கைகள்* 👇

1. கீழக்கரை நகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் முறையற்ற வகையில் மறு வரையறை செய்யப்பட்டுள்ளதால், இந்த மறு வரையறை பட்டியல் முழுவதையும் திரும்ப பெற வேண்டும்

2. கீழக்கரை நகராட்சியின் மக்கள் தொகையை நகராட்சி ஆவணங்களின் அடிப்படையில் சீர்திருத்தம் செய்ய உரிய ஆய்வு மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட வேண்டும்.

3. சிறப்பு பயிற்சி பெற்ற அதிகாரிகளை கொண்டு , மீண்டும் சட்ட விதிமுறைப்படி சிறப்பு கள ஆய்வுகளை மேற்கொண்டு வார்டு மறு வரையறை பட்டியலை வெளியிட வேண்டும்.

குற்றச்சாட்டுகளையும், கோரிக்கைகளையும் கவனமுடன் கேட்டிருந்த மாவட்ட ஆட்சியர் அவர்கள் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்தார்.

மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட கீழக்கரை பொதுமக்களும், கீழக்கரை சட்டப் போராளிகளும், சமூக அமைப்பினரும், அரசியல் கட்சினரும் நேரடியாகவும், ஆன்லைன் மூலமும், பதிவுத் தபால் மூலமாகவும் தங்கள் ஆட்சேபனை மனுக்களை அனுப்பி இருந்தனர். இதனை தொடர்ந்து தற்போது வார்டு மறுவரையரை குளறுபடிகள் சம்பந்தமாக மனு செய்திருந்த மனுதாரர் அனைவருக்கும் கீழக்கரை நகராட்சி ஆணையரிடம் இருந்து மதுரையில் நடைபெறும் கருத்து கேட்பு கூட்டத்திற்கான அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

அந்த அழைப்பு கடிதத்தில், மதுரை மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் எதிர்வரும் 06.02.2018 அன்று காலை 10.30 மணியளவில் மறுவரையறை ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர் முன்னிலையில் நடைபெறும் கூட்டத்தில் மனுதாரர், பொதுமக்கள், அரசியல் கட்சிகள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை, ஆட்சேபனைகளை நேரடியாக தெரிவிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கீழக்கரை சட்டப் போராளிகள் குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர் முஹம்மது சாலிஹ் ஹுசைன் கூறுகையில் ”கீழக்கரை நகராட்சியில் நடைபெற்று இருக்கும் இந்த குளறுபடியான வார்டு மறுவரையறை பட்டியலை முற்றலும் கைவிட்டு மீண்டும் புதிய பட்டியல் தயாரிக்க அனைவரும் கட்சி, இயக்க வேறுபாடுகளை களைந்து குரல் கொடுக்க முன் வரவேண்டும்.

இது போன்ற கருத்து கேட்பு கூட்டங்களில் பொதுமக்களாகிய நாம் கலந்து, ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டு சட்ட ரீதியிலான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால் கண் கெட்ட பிறகு கதிரவனை தேடும் மனிதர்களாக நாம் ஆகி விடுவோம். எங்களுக்கு இதை விட பெரிய வேலைகள் இருக்கிறது என்று நீங்கள் சொல்வீர்கள் என்றால் பிறகு ஜனநாயகத்தை குறை சொல்லி வேலைகள் இல்லை.” என்று தெரிவித்தார்.

இது குறித்து துபாயில் பணியாற்றும் 18 வாலிபர் ஷஹீத் அறக்கட்டளை தலைவர் நஜீம் மரிக்கா கூறுகையில் ”வார்டு மறுவரையறை குளறுபடி சம்பந்தமாக கடந்த மாதம், கீழக்கரை சட்டப் போராளிகள் குழுமம் வாயிலாக கிடைத்த தகவலின் அடிப்படையில், கீழக்கரை நகராட்சிக்கு மின்னஞ்சல் மூலம், துபாயில் இருந்து எனது ஆட்சேபனை மனுவினை அனுப்பினேன். அதற்கு தற்போது கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தினரிடம் இருந்து நல்ல முறையில் பதில் கிடைத்துள்ளது.

நாம் பணி நிமித்தமாக வெளிநாடுகளில் வசித்தாலும், நம் கீழக்கரை நகரின் பிரச்சனைகளை ஆன்லைன் மூலம் சம்பந்தப்பட்ட துறை அலுவலகங்களுக்கு அனுப்பி நல்லதொரு தீர்வினை காண முடியும் என நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.  ‘பிப்ரவரி 6’ ஆம் தேதி மதுரையில் நடைபெறும் கருத்து கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள், பொதுநல அமைப்புகள், அரசியல் கட்சிகள் சிரமம் பார்க்காமல் கலந்து கொண்டு தங்கள் ஆட்சேபனைகளை நேரில் தெரிவிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

மதுரையில் நடைபெறும் கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொள்ள விரும்பும் சகோதரர்கள், மதுரை செல்வதற்கு வாகன ஏற்பாடு செய்வதற்கு ஏதுவாக கீழக்கரை சட்டப் போராளிகள் குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர் சாலிஹ் ஹுசைனை பின் வரும் அலை பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

சாலிஹ் ஹுசைன் : 9791742074

இது சம்பந்தமாக நம் இணையதளத்தில் சமீபத்தில் வெளிட்ட செய்தி:-

http://keelainews.com/2018/01/05/ward-issue/

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!